Advertisment
Presenting Partner
Desktop GIF

’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்!

"கே.பி சார் அரங்கிற்குள் வந்தால் நடிகர்கள் தொடங்கி லைட் பாய் வரை எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சார் கிட்ட இருக்கும்."

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth about K Balachander on his 90th birthday

Rajinikanth about K Balachander on his 90th birthday

Rajinikanth: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகவும், ஆளுமைகளாகவும் விளங்குபவர்கள் ரஜினிகாந்த் - கமல் ஹாசன். இவர்கள் இருவருமே தொழில் வாழ்க்கையில் மிகப் பெரிய உயரங்களை அடைவதற்கு, முக்கியக் காரணமாக திகழ்ந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.

Advertisment

பிரபல சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடுகிறதா சன் டிவி?

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். வித்தியாசமான கதைகளத்தில் பல திரைப்படங்களை இயக்கிய கே.பாலச்சந்தர் 9 தேசிய விருதுகளை வென்றுள்ளார். திரைத்துரையில் அவரது சேவைக்காக, பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகிப் பால்கே உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். உடல்நலக் குறைவால் 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காலமான கே.பாலசந்தரின் 90-வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் கவிதாலயாவின் யூ-ட்யூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நினைவலைகளைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அதில், “இன்றைக்கு என் குருநாதர் கே.பி சாருடைய 90-வது பிறந்த நாள். கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் கூட, நான் நடிகனாகியிருப்பேன். கன்னட மொழியில் வில்லன் கதாபாத்திரத்திலோ, அல்லது சின்ன சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து ஒரு சின்ன நடிகனா பாதையிலே போயிருப்பேன்.

நான் இன்றும் பலரோட, ஆண்டவன் புண்ணியத்தில் பேரும் புகழோட நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே கே.பாலசந்தர் சார் அவர்கள் தான். என்னை அவர் தேர்ந்தெடுத்து பெயர் வைத்து, என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி என்னுடைய ப்ளஸ் என்ன என்பதை எனக்கே காட்டிக் கொடுத்து, என்னை ஒரு முழு நடிகனாக்கி, 4 படங்கள் ஒப்பந்தம் போட்டு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தான் என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். என்னுடைய வாழ்க்கையில் எனது அப்பா - அம்மா, வளர்த்து ஆளாக்கிய அண்ணா, அதற்குப் பிறகு பாலசந்தர் சார் அவர்கள் தான். இவர்கள் 4 பேருமே 4 தெய்வங்கள்.

https://www.facebook.com/Rajini007/posts/3709787589037600

எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர். அவர் உயிரோடு இருக்கும் போது படம் இயக்கி, தயாரித்து பல பேருக்கு வேலையும் கொடுத்தார். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்குக் காரணமாகவும் இருந்தார். நான் எத்தனையோ இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். இந்தியில் ரமேஷ் சிப்பி, சுபாஷ் கய் போன்றவர்கள். அப்புறம் 'உன்னிடம் மயங்குகிறேன்' என்று ஒரு படம் பண்ணினேன். அது வெளியாகவில்லை. பீம்சிங் அவர்கள் இயக்கிய போது உடம்பு சரியில்லாமல் போனது, அப்புறம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் இயக்கினார். அப்புறம் மணிரத்னம், ஷங்கர் என எத்தனையோ இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்.

ஆனால் கே.பி சார் அரங்கிற்குள் வந்தால் நடிகர்கள் தொடங்கி லைட் பாய் வரை எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சார் கிட்ட இருக்கும். அதை வேறு யார் கிட்டயும் நான் பார்த்ததில்லை. அவர் என் குரு என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அவர் மனித ஜென்மம் எடுத்து இந்த உலகிற்கு வந்து எல்லா கடமைகளையும் மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக அனைத்து வேலைகளையும் சரியாக செய்து ரொம்ப சீக்கிரம் காலமாகிவிட்டார்.

நம்ம மதுரை மக்களோட மூளையே தனி… வரவேற்பைப் பெறும் ‘மாஸ்க் பரோட்டா’

இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம். நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அத்தனை பேருக்கு வாழ்க்கைக் கொடுத்த பெரிய மகான் அவர். அவருடைய இந்த 90-வது பிறந்த நாளில் அவரை நினைவுபடுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய ஆத்மா எங்கிருந்தாலும் நிம்மதியாக, சாந்தியாக இருக்கும்"

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment