”என் சுறுசுறுப்பின் ரகசியம்…” ரஜினியின் பதிலைக் கேட்டு வியந்த ரசிகர்கள்!

Darbar Pongal: படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அந்த மேஜிக் தர்பாரில் நடந்துள்ளது.

By: Updated: January 4, 2020, 10:47:36 AM

Superstar Rajinikanth : நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய உற்சாகத்தில் இருக்கிறார்கள். காரணம் இன்னும் சில தினங்களில் அவர் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

முதல் படத்திற்கு 17 வயது: வித்தியாசமாக கொண்டாடிய ஜெனிலியா ரித்தீஷின் வீடியோ

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தர்பாரின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை ஹைதராபாத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, முருகதாஸ், லைகா நிறுவனத்தை சேர்ந்த சுபாஷ்கரன், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் ரஜினியை காண ஏராளமானோர் திரண்டனர். தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்க, தெலுங்கில் பேசிய ரஜினி, “என் முதல் தெலுங்கு படம் ரிலீஸானபோது இங்கிருக்கும் பலர் பிறந்திருக்கவே மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் 160 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். தமிழ் ரசிகர்களை போன்றே தெலுங்கு ரசிகர்களும் எனக்கு அமோக ஆதரவு அளித்து வருவது நான் செய்த பாக்கியம்.

புத்தாண்டு நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் கொடுத்த ‘முல்லை’ ரசிகர்கள் – வீடியோ உள்ளே

15 ஆண்டு முயற்சி

நான் தமிழில் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் தெலுங்கிலும் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ளன. படம் நன்றாக இருக்கிறது என்பதற்காக பார்த்தாலும், ரஜினி நடிக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். அதற்காக நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் 15 ஆண்டுகளாக முயன்றேன். தற்போது தான் நடந்துள்ளது. படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அந்த மேஜிக் தர்பாரில் நடந்துள்ளது. என் கரியரின் சிறந்த ஆக்ஷன் த்ரில்லராக தர்பார் இருக்கும்.

எனெர்ஜி ரகசியம்

70 வயதில் எப்படி இப்படி சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கொஞ்சமாக சாப்பிட வேண்டும், கொஞ்சமாக ஆசைப்படணும், உடற்பயிற்சி செய்யணும், கொஞ்சமாக தூங்கணும், கொஞ்சமாக பேசணும். இது தான் நான் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்க காரணம்” என்று ரஜினி சொல்லி முடித்ததும், கரகோஷங்கள் வானை பிளந்தன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Superstar rajinikanth shares his secret of energy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X