100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூர்யா!

இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்கள் படக்குழுவினர்.

By: Updated: February 13, 2020, 12:24:08 PM

Soorarai Pottru – Veyyon Silli Song: ‘காப்பான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ’சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் சுதா கொங்கரா இதனை இயக்கியிருக்கிறார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இதனை தயாரித்திருக்கிறது.

சமந்தாவா? கரீனா கபூரா? ஒரே மாதிரியான சேலையில் அட்டகாசமாக இருப்பது யார்?

ஒரு விமானியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இயக்கப்படுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதற்கேற்றவாறு சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், டீசரும் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதோடு படத்தின் தீம் மியூஸிக்கான ‘மாறா தீம்’ சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. 

இந்நிலையில் ’வெய்யோன் சில்லி’ எனும் பாடல் இன்று வெளியிடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் முதன் முறையாக பறக்கும் விமானத்தில் வைத்து. அதாவது ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் போயிங் 737 ரக விமானத்தில் பாடல் வெளியீடு நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடல் வெளியீட்டுக்காக இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்கள் படக்குழுவினர்.

‘எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்யுங்க’ – ஆர்சிபி மீது உரிமையுடன் கோபப்பட்ட கோலி

சூர்யாவின் அகரம் பஃவுண்டேசன் சார்பில், கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அந்த போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட100 குழந்தைகளும் தான் விமானத்தில் செல்ல தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். இன்று அவர்கள் அனைவரும் விமானத்தில் ஏறி தங்களது கனவை நனவாக்கிக் கொண்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Suriya soorarai pottru veyyon silli 100 first time flyers

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X