/tamil-ie/media/media_files/uploads/2019/05/ngk-surya-1.jpg)
tamil movie, surya next movie aruva, Suriya’s next film titled Aruvaa
சுதொ கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் "அருவா"
இந்த படத்தின் இயக்குனர் ஹரி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.
யாருப்பா மல்லிகா?: மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ‘அழகு’
இயக்குனர் ஹரியும், நடிகர் சூர்யாவும் இணையும் 6-வது திரைப்படம் இதுவாகும். இது சூர்யாவின் 39வது திரைப்படமாகும். இயக்குனர் ஹரியின் 16வது திரைப்படமாகும்.
இசை டி. இமான். இவர் சூர்யாவுடனும், இயக்குநர் ஹரியுடனும் முதல் முறையாக இணைகிறார்.
மேலும், இந்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, வரும் தீபாவளி அன்று வெளியீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால தொகுப்பாளர்கள்: டிவி ஆங்கர்களின் குழந்தைகள் இவர்கள் தான்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படமும், அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளியன்று வெளிவரும் என்று நம்பப்படுகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவக் கூடிய சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.