/tamil-ie/media/media_files/uploads/2020/06/a93-1.jpg)
Sushant Singh Rajput, MS DHoni, MS DHoni biopic, Superstar Rajinikanth, Sushant Rajinikanth Chennai, சுஷாந்த் சிங் ராஜ்புட், ரஜினி, தோனி, சினிமா செய்திகள்
கொரோனா கொடுமைகளையும் மீறி, கடந்த சில நாட்களாக அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிகழ்வு, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை தான்.
சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து, பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படம், இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துக் கொடுத்தது.
ஆல் தி பெஸ்ட் மா: வனிதா விஜயகுமார் திருமணத்திற்கு மகள் உருக்கமான வாழ்த்து
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
தமிழ் சினிமா டெக்னீசியன் திடீர் மரணம்: நடிகர்கள் இரங்கல்
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த போது எடுத்த வீடியோ தற்போது சமூக தளங்களில வைரலாகி வருகிறது. எம்.எஸ். தோனி படத்தின் புரமோஷனுக்காக, ரியல் தோனியுடன் சேர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்க அவருடைய இல்லத்திற்கு சுஷாந்த் சென்று இருந்தார்.
அப்போது தோனி, நடிகர் சுஷாந்தை ரஜினியிடம் அறிமுகம் செய்து வைத்தார். தோனி படம் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினி, தனக்கே உரித்தான ஸ்டைலில் தோனியிடம், 'சரி... உங்கள் ரோலில் நடிப்பது யார்?' என்று ஆவலாக கேட்க, அமைதியாய் அமர்ந்திருந்த சுஷாந்த்தை ரஜினியிடம் காண்பித்த தோனி, 'இவர் தான் நடிக்கிறார்' என்று அறிமுகம் செய்ய, சுஷாந்த் சற்றே சங்கோஜப்பட்டு அமர்ந்திருப்பது நன்றாக தெரிகிறது.
ஆனால், படம் வெளியான பிறகு, அந்த ரஜினியே ஆச்சர்யப்பட்டிருப்பார், சுஷாந்தின் நடிப்பைப் பார்த்து! தோனியாகவே தன்னை செதுக்கியிருப்பார் சுஷாந்த்.
ரஜினியை சுஷாந்த் சந்தித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எப்படியெல்லாமோ இருந்திருக்க வேண்டிய, வாழ்ந்திருக்க வேண்டிய சுஷாந்த் மரணம், இன்னமும் நம் கண்களை ஈரமாக்கிக் கொண்டே இருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.