தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தென்காசி மாவட்டத்தில பைக் ரைடு செனற வீடியோ காட்சி இணையததில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் ஒருவரான அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர்கள் மன்றங்களை கலைத்தவிட்டாலும், அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அப்படியேதான் உள்ளது ஒவ்வொரு முறையும் அஜித் படம் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு.
இதையும் படியுங்கள் : பாசிட்டீவ் கேரக்டரா? வெளியே போங்க…. பாக்யராஜை விரட்டிய நம்பியார்
இந்நிலையில், வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள துணிவு படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை வலிமை படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் உணமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
நாளுக்கு நாள் இந்த படத்தின் அப்டேட்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், படக்குழு மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் நடிகர் அஜித் தென்காசி மாவட்டத்தில் பைக் ரைடு சென்றுள்ளார்.
நடிப்பு மட்டுமல்லாமல், பைக்ரைடு, துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் அவ்வப்போது பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அஜித் இந்தியா முழுவதும் பைக் ரைடு மூலம் தனது பயணத்தை முடித்துள்ளதாக அவரின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள் : வாடிவாசல் படம் கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விளக்கம்
இதனிடையே நடிகர் அஜித் தமிழகத்தின் தென்பகுதியான தென்காசி மாவட்டத்தில் பைக் ரைடு சென்றது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி செல்லும் அஜித் தொடர்பாக வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தனது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காக அஜித் தற்போது துணிவு படம் வெளியாக உள்ளதால் படத்தின் ப்ரமோஷன் தொடர்பாக பயணம் மேற்கொண்டுள்ளாரா என்று கேட்டு வருகின்றனர் ஆனாலும் அஜித் ரசிகர்கள் இந்த வீடியோ பதிவை இணையத்தில் வைலாக்கி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/