scorecardresearch

ஹீரோ ப்ளஸ் வில்லன் அஜித் செம மாஸ்: துணிவு முதல் விமர்சனம் ரிலீஸ்

இந்தியாவில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு துணிவு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது

ஹீரோ ப்ளஸ் வில்லன் அஜித் செம மாஸ்: துணிவு முதல் விமர்சனம் ரிலீஸ்

அஜித் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் நாளை மறுநாள் (ஜனவரி 11) வெளியாக உள்ள துணிவு படத்தின் முதல் விமர்சனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே துணிவு படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ‘விதி தன் வேலையை சரியா செய்திருக்கு’: வடிவேலுவை சீண்டிய முத்துக்காளை

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துணிவு படம் இந்தியாவில் நடைபெற்ற வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியாக துணிவு படத்தின் டிரெய்லரில் பல காட்சிகள் வங்கியில் நடப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : வாரிசு சம்பளம் இத்தனை கோடி… நயன்தாராவை முந்திய ராஷ்மிகா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 11-ந் தேதி வெளியாக உள்ள துணிவு படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. சென்சார்போர்டில் துணிவு படத்தை பார்த்த ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் படத்தின் முதல் விமர்சனத்தை எழுதியுள்ளார். இதில், துணிவு படத்தில் அஜித் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. தனக்கே உரிய பாணியில் ஹீரோவான வில்லனாக நடிப்பில் அசத்தியுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ள மஞ்சுவாரியார் படத்தின் பெரிய சர்ப்ரைஸ். அஜித்தின் நேர்த்தியான நடிப்பு ஸ்டைலிஷான நடை, நிச்சயம் ரசிகர்களை கவரும் செம மாஸ். ஹாலிவுட் தரத்தில் எச்.வினோத் துணிவு படத்தை படமாக்கியுள்ளார்.  தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத ஒரு படமாக துணிவு இருக்கும். இளைஞர்களை இந்த படம் கண்டிப்பாக கவரும். அதற்காக இயக்குனர் எச்.வினோத்க்கு பாராட்டுக்கள் என்று கூறி 5/3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema ajith thunivu movie first review in tamil viral