/indian-express-tamil/media/media_files/l0Yb9T5ZeJExgeJtYeJY.jpg)
கரு.பழனியப்பன் - ஞானவேல்ராஜா - அமீர்
பருத்தி வீரன் படம் தொடர்பாக இயக்குனர் அமீர் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் புதியதாக இயக்குனர் கரு பழனியப்பன் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி சமீபத்தில் வெளியான ஜப்பான் படத்தின் மூலம் தனது 25-வது படத்தை நிறைவு செய்தார். இந்த படம் வெளியீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கார்த்தி 25 நிகழ்ச்சியில் அவரின் முதல் படமாக பருத்தி வீரன் படத்தின் இயக்குனர் அமீர் வரவில்லை. இது குறித்து கார்த்தியிடம் கேட்டபோது நாங்கள் அழைப்பிதழ் அனுப்பினோம் அவர் வரவில்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : பருத்திவீரன் சர்ச்சை; கார்த்தி அமைதியா வேடிக்கை பார்ப்பது சரியல்ல: சமுத்திரக்கனி ஆவேசம்
தொடர்ந்து அமீரிடம் விசாரித்தபோது அவர்கள் எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை. தான் நெருக்கிய பழக்கத்தில் இருந்த சிவக்குமார் குடும்பத்துடன் தனக்கு இப்போது தொடர்பே இல்லை. அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இடையில் என்ன பிரச்சனை என்பது குறித்து சமூகவலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக ஞானவேல் ராஜா பேட்டி அளித்து வருகிறார்.
இதில் அமீர் பணக்கஷ்டத்தில் இருந்தபோது அவருக்கு உதவுவதற்காக பருத்தி வீரன் படத்தை தயாரித்தேன். ஆனால் அவர் செலவுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை. படத்தின் வெளியீட்டுக்கு சூர்யா தனது கையில் இருந்து பணம் கொடுத்து உதவினார். கார்த்தியை அமீர் அறிமுகப்படுத்தவில்லை. நாங்கள் தான் அமீருக்கு உதவி செய்தோம் என்றும், அமீரின் நடவடிக்கைள் தான் சூர்யா மற்றும் கார்த்தியின் குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாமல் போனது. அதற்கு நான் காரணம் இல்லை என்று கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள் : அண்ணன் அமீர் சொல்வது உண்மை... ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கண்டனம்
இதற்கு பதில் அளித்திருந்த இயக்குனர் அமீர், நடந்த விஷயங்களை சொல்ல எனக்கு சில மணி நேரங்களை போதும் ஆனால், நான் சொல்லும் விஷயம் பலரின் வாழ்க்கையில் புயலை கிளம்பும் என்பதாலும், ஒட்டுமொத்த திரையுலகையும் திசைதிருப்ப வைக்கும் என்பதாலும் அமைதியாக இருக்கிறேன் வேறு எதற்காகவும் அல்ல என்று முடித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஞானவேல் ராஜாவின் கருத்துக்கு இயக்குனர் சமுத்திரக்கனி, சசிகுமார் இருவரும் கடுமையாக கண்டனங்கள் தெரிவித்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் கரு.பழனியப்பன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் !
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 25, 2023
இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார் @SasikumarDir சமுத்திரக்கனி @thondankani இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய
பிற கலைஞர்களும் பேச வேண்டும் ! @Karthi_Offl கார்த்தி உட்பட !! https://t.co/uohFSQb0Al
இது தொடர்பான தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் கரு.பழனியப்பன்,’’ ‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர்! இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும்! கார்த்தி உட்பட" என்று கூறியுள்ளார். அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் ஒரு சில தயாரிப்பாளர்கள் பேட்டி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us