/indian-express-tamil/media/media_files/2025/09/17/chandhr-2025-09-17-11-11-00.jpg)
கூமாப்பட்டி தங்கபாண்டியுடன் சிங்கிள் பசங்க ஷோவில் நடனமாடி தற்போது வைரல் நாயகியாக மாறியுள்ள நடிகை சாந்தினி பிரகாஷ் தனக்கு 2 முறை காதல் தோல்வி, அப்பாவுக்கு குடிப்பழக்கம் என தனது வாழ்க்கையின் சோகம் குறித்து பேசியுள்ளார்.
சின்னத்திரையில் பூவே பூச்சூடவா சீரியல் மூலம், பிரபலமான நடிகை சாந்தினி பிரகாஷ் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார், விஜய் டிவி சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது, அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியலாக பலரின் மனதை வென்றது.
இதையும் படிக்கலாமே: சோலோ ஹீரோயின் ரேஸில் சாதித்தவர்; சூப்பர் ஸ்டார்ஸ்க்கு டஃப் கொடுத்த இந்த சிறுமி ஒரு வாரிசு நடிகை!
இந்த சீரியல் முடிந்த உடனே அடுத்த வாரமே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பானது. இதில், நடிகை நிரோஷா பாண்டியன் கேரக்டரின் மனைவி கோமதி கேரக்டரில் நடித்து வரும் நிலையில், முதல் சீசனில் நடித்த வெங்கட், ஹேமா ராஜ்குமார், ஸ்டாலின் முத்து ஆகியோர் மட்டும் 2-வது சீசனில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்த சீரியலில் சுகன்யா என்ற முக்கிய கேரக்டரில் வில்லியா? நல்லவரா என்ற குழப்பத்தை ஏற்படும் கேரக்டராக வருபவர் தான் சாந்தினி பிரகாஷ்.
தற்போது ஐ.பி.சி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், கூறுகையில், பணம் தான் முக்கியம். அதன்பிறகு தான எல்லாமே, அன்பு என்ற ஒன்றை பார்த்த பல பெண்கள் ஏமார்ந்துபோகிறார்கள். பணம் இருந்தால் வாழ்க்கையில் யார் இல்லை என்றாலும் அந்த பணம் நம்மை காப்பாற்றும். தனது தேவைகளையும், குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள பணம் அவசியம். நேர்மையாக சம்பாதித்தாலும், எப்படி சம்பாதித்தாலும், உலகம் தப்பாகத்தான் பேசும். தப்பான வழியில் சம்பாதித்த பணம் நிலைக்காது. போய்விடும். நேர்வழியில் சம்பாதித்தது பொக்கிஷம்.
பெண்கள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைக்க வேண்டும். இந்த பணம் எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவும். சின்ன வயதில் இருந்து என்னை மட்டம் தட்டியது தான் அதிகம் உன் மூஞ்சிக்கு சினிமா கேட்குதா? என்று பலதரப்பட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். என் குடும்பமே இப்படி பேசும்போது மற்றவர்கள் எப்படி பேசாமல் இருப்பார்கள். குடும்பத்தில் என் அப்பா அம்மா இருவரின் சண்டையை பார்த்து வளர்ந்தேன்.
இதையும் படிக்கலாமே: ஆட்டமா, தேரோட்டமா... இந்த பாடலை பாடியது யார் தெரியுமா? அந்த பாடகி இப்ப உயிரோட இல்ல!
என் அப்பா ஒரு குடிகாரர். குடித்துவிட்டு வந்து ரத்தம் வரும் வரை எங்க அம்மாவை அடிப்பார். அதன்பிறகு தான் ஆண்கள் மீதுள்ள மரியாதையே போய்விட்டது. ஆண்களை நம்ப கூடாது என்று இருந்தேன். அப்படி இருந்தும் எனக்கு நிறைய ப்ரபோசல்கள் வந்தது. அவர்கள் அனைவரும் ப்ளேபாயாக இருந்தார்கள். எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ், ஆனா எங்க அம்மாதான் உலகம் என்று இருந்தவர் எங்க அப்பா. ஆனால் எனக்கு வந்த ப்ரபோசல்கள் நான் இருக்கும்போதே இன்னொரு பெண்ணை பார்க்கும் பையாக இருந்தார்கள்.
அப்படி இருந்தும், ஒரு பையனை காதலிக்க என்னை என் நண்பர்கள் வற்புறுத்தினார்கள். அவனை நான் காதலித்தேன். அவனுக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாவற்றையும் நான்தான் சொல்லிக்கொடுத்தேன். வெளியில் எப்படி பேச வேண்டும்? பெண்களிடம் எப்படி பேச வேண்டும், என்பது முதற்கொண்டு அனைத்தும் சொல்லிக்கொடுத்தேன். ஃபினான்சியல் ரீதியாகவும் சப்போர்ட்டாக இருந்தேன். ஆனால் அதுவே அவனுக்கு ப்ரஷர் ஆகிவிட்டதால் அந்த லவ் புட்டுக்கிச்சி. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ண என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால் அதை கடைசி வரை செய்வதே இல்லை என்று சாந்தினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: மூஞ்சிக்கு முன்னாடி கை நீட்டாத, எனக்கு பிடிக்காது; பிக்பாஸ் வீட்டில் நடந்த காரசார விவாதம்: கடுப்பான வாட்டர் மிலன் ஸ்டார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us