அறிமுகமே அஜித்துடன்: ரசிகர்களைக் கவர்ந்த ’கொழுக் மொழுக்’ சந்திரா!

"எனது நிஜ பெயரை விடவும் சந்திரலேகா நாடகத்தில் நான் நடிக்கும் சந்திரா என்னும் கேரக்டர் பெயரையே அனைவரும் குறிப்பிடுகிறார்கள்”

By: Updated: August 27, 2020, 03:38:11 PM

Tamil Serial News, Sun TV Serial:  சீரியலைப் பொறுத்தவரை பெரும்பாலான  நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள் தான். முன்னணி நடிகர்களின் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் கூட தற்போது சீரியலில் நடித்து வருகிறார்கள். ராதிகா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் ஒருபுறம் சினிமா மறுபுறம் சீரியல் என தங்கள் கரியரை பேலன்ஸ் செய்து வருகிறார்கள். இதற்கிடையே சினிமாவிலிருந்து சின்னத்திரைக்குள் நுழைந்த நடிகை ஸ்வேதா பண்டேகர் இன்று சின்னத்திரை ரசிகர்களிடம் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். யாரிவர் என்கிறீர்களா? சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ’சந்திரலேகா’ என்ற தொடரில் சந்திரா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.

’உன்ன கல்யாணம் பண்ணிக்கிறவ…’ மகாவின் வார்த்தையில் விழுந்த மாயன்!

Shwetha Bandekar, Sun TV Chandralekha Serial                                                  ஒரு விருது விழாவுக்குச் செல்லும் முன்…

சென்னையில் உள்ள பி.எம்.ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்த ஸ்வேதா ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். அழகான தோற்றத்தினால் பின்னர் இவருக்கு, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. 2007 -ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா. முதல் படமே அஜித் படம் என்பதால், அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008-ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான ’வள்ளுவன் வாசுகி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ’மறுமலர்ச்சி’ படத்தை இயக்கிய பாரதி தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் எதிர் பார்த்த வெற்றியை தராததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமானது.

Shwetha Bandekar, Sun TV Chandralekha Serial                                                                  டிரடிஷனல் உடையில்…

இதைப் பற்றி நேர்க்காணல்களில் பேசிய ஸ்வேதா, “திரைப்படங்களில் இல்லாத அளவிற்கு ரசிகர்களின் அன்பு சீரியல் மூலம் கிடைத்திருப்பது, ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் சரியான பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரிகிறது. ஊடகங்களில் இதுவரை எனது இயற்பெயர் வெளிவந்ததில்லை. எனது நிஜ பெயரை விடவும் சந்திரலேகா நாடகத்தில் நான் நடிக்கும் சந்திரா என்னும் கேரக்டர் பெயரையே அனைவரும் குறிப்பிடுகிறார்கள்” என்றார்.

Shwetha Bandekar, Sun TV Chandralekha Serial                                                                                ஏஞ்சல் போல…

இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா, இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்திலும் நடித்திருந்தார். எதிர்பார்த்த வெற்றியை சினிமா கொடுக்கவில்லை என்றாலும், சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது. பிரபல சோப், நெய் விளம்பரங்களிலும் நடித்துள்ளார். பின்னர் 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மகள்’ என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ’சந்திரலேகா’, தொடரில் நடித்து வருகிறார். சந்திரலேகா தொடர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடி வருகிறது. 1500 எபிசோட்களை கடந்திருக்கு இந்த சந்திரலேகா சீரியலில், சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருதையும் ஸ்வேதா வாங்கினார்.

’ஜனவரி 2021-ல் நாங்கள் மூன்று பேர்’ அனுஷ்கா-விராட் சொன்ன குட் நியூஸ்!

சொப்னா என்ற பெயரை குறும்படத்திற்காக ஸ்வேதா என்று மாற்றிக் கொண்ட அவர், தனது குடும்பப் பெயரான பண்டேகர் என்னும் பெயரை இணைத்து ஸ்வேதா பண்டேகர் என்று மாற்றியிருகிறாராம். தவிர இன்ஸ்டாகிராமில் வித விதமான படங்களை பதிவிட்டு, ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்கிறார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news chandralekha serial swetha bandekar sun tv

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X