/tamil-ie/media/media_files/uploads/2020/02/Chithi-2-serial.jpg)
chithi serial part 2, chithi serial cast, sun tv serial, சித்தி 2 சீரியல், சன் டிவி சீரியல், ராதிகா சரத்குமார்
Chithi Serial Part 2: சித்தி 2 சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்து முழுசா ஒரு மாதம்தான் ஆச்சு. அதுக்குள்ளே சித்தி 2 டைரக்டர் சுந்தர் கே.விஜயனை மாத்திட்டாங்க. இப்போ டைரக்டர் சுலைமான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஏங்க.. மக்களுக்கு கதையே பிடிபடலை.. அதுக்குள்ளே இயக்குநரை மாற்றினால் மட்டும்... சித்தி 2 சூப்பர் ஹிட்டா? நந்தினிக்கு விட்ட ஒரு அறைக்கே அவள் இன்னும் பழித் தீர்த்துக்க முடியாம மனசுக்குள்ள வஞ்சத்தை வச்சுக்கிட்டு மிரட்டறா... அதுக்குள்ளே இன்னொரு அறை...
Women’s Day 2020 : நதி போல சோர்வடையாத பெண்களுக்கு இனிய வாழ்த்துகள்!
ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகள் தனித்தனி தீவு மாதிரியான காட்சிகளாக இருப்பதால், கதையோடு ஒட்டி நகரவே இல்லை. இடைச்செருகலாக அங்கங்கே செருகின மாதிரியான காட்சிகள் என்று காண்பிக்கப்பட்டு இருந்தாலும், அத்தனை காட்சிகளையும் வேண்டும் என்றே திணிப்பது போலத்தான் இருக்கிறது. டைரக்டரை மாத்தி என்ன செய்யறது.. கதை சரி இல்லைங்க.
பேராசிரியர் அன்பழகன் : ஒர் அர்த்தமுள்ள அரசியல் பயணம்
சித்தி கிரேஸ் சித்தி 2 சீரியலுக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. ஆனால் ஒளிபரப்பாகத் தொடங்கியதும், அந்த கிரேஸ் சித்தி 2-ல் இல்லை என்றே சொல்ல வேண்டும். சில சீரியல்கள் போகப்போகத்தான் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சித்தி 2-ம் அப்படி இருந்தால் நல்லது!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.