scorecardresearch

’ரஜினி சொன்ன அந்த விஷயம் என்னை தூக்கிவாரிப் போட்டது’ – ஒய்.ஜி.மகேந்திரன்

வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் விசு, நடிகை வனிதா, ஒய்.ஜி. மகேந்திரன் மனைவி ஜெயா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகேந்திரன் குறித்து பேசினர்.

Tamil TV News, Jaya TV Autograph, YG Mahendran
Tamil TV News, Jaya TV Autograph, YG Mahendran

Jaya TV, Autograph: ஜெயா டிவியின் ஆட்டோகிராப் நிகழ்ச்சியில் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துக்கொண்டார். 2004-ல் இவர் கலந்துக்கொண்ட இந்த ஷோ ஜெயா டிவியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது பேசிய மகேந்திரன், ரஜினி திடீர்னு ஒரு நாள் எனக்கு போன் செய்து, நான் லதாவை கல்யாணம் செய்துக்க போறேன்னு சொன்னதாகக் கூறினார். மகேந்திரன் தனது தந்தை ஒய் ஜி. பார்த்தசாரதி நடக்குழுவில் இணைந்து பணியாற்றி, மிகச்சிறந்த நாடகங்களை வழங்கியவர். சிறந்த நாடக கலைஞர் என்று புகழ்பெற்றுத் திகழ்பவர்.

ஆஸம் ஆண்ட்ரியா, அட்மைரிங் நிக்கி கல்ராணி – படத்தொகுப்பு

வியட்நாம் வீடு சுந்தரம், இயக்குநர் விசு, நடிகை வனிதா, ஒய்.ஜி. மகேந்திரன் மனைவி ஜெயா உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மகேந்திரன் குறித்து பேசினர். நகைச்சுவை நடிகை வனிதாவுடன் பல படங்களில் சேர்ந்து நடித்ததால், இருவர் குறித்தும் அப்போது நிறைய கிசு கிசுக்கள் வந்ததாகவும் இருவரும் கூறினார்கள். எனக்கு நகைச்சுவை வரும் என்று கண்டுபிடித்து, நடிக்க வைத்தவர்கள் மகேந்திரனும், கமல் சாரும் தான் என்று வனிதா கூறினார்.

கொரோனாவை வென்றெடுத்த 93 வயது உருது கவிஞர்!

ரஜினி திடீர்னு ஒரு நாள் எனக்கு போன் செய்து, நான் லதாவை கல்யாணம் செய்துக்க போறேன்னு சொன்னார். நான் வேற லதான்னு நினைச்சு அதுக்கென்ன, இதை ஏன் என்கிட்டே சொல்றார்னு நினைச்சுகிட்டு, தாராளமா பண்ணிக்கோங்கன்னு சொன்னேன். என்ன இப்படி சொல்றீங்க.. உங்க மனைவியின் தங்கை லதாவைத்தான் கல்யாணம் செய்துக்க போறேன்னு சொன்னார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது… என்னடா அடிமடியிலே கை வைக்கிறாரேன்னு நினைச்சேன்னு என சொல்லி சிரித்தார் மகேந்திரன்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial news jaya tv autograph y g mahendran

Best of Express