Tamil Serial News: வந்தனாவை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. பிரபலமான பல சீரியல்களில் நடித்து அதகளம் செய்த வில்லி நடிகை. ஆனால் ஆரம்பமானது சன் டிவி-யில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் தான்.
கணவர் மைக்கேலுடன்...
அதில் பிரபலமடைந்ததால், தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது என்னவோ, தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகு தான். அதன்பிறகு பல சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
என்னா டான்ஸ் டா… மாமியார் நடிகையின் அசத்தல் நடனம்!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ’காதல் முதல் கல்யாணம் வரை’ சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து மிரட்டினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’மெல்ல திறந்தது கதவு’ உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்து அசத்தினார். திரையில் ஹீரோயிஸம் காட்டுபவர்கள் அனைவரும், நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. அதே போன்று வில்லத் தனத்தால், ரசிகர்களிடம் பல திட்டுகளை வாங்கிய நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் மிக மென்மையானவர்கள். அதே போலத் தான் வந்தனாவும்.நிஜத்தில் இவர் அமைதியானவர். சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் மிகவும் பாஸிட்டிவானவர்.
வந்தனா மைக்கேல்...
கதைக்கு ஏற்றவாறு எல்லா எக்ஸ்பிரஷன்களையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுவதால் தான் வந்தனாவுக்கு நிறைய வில்லி கேரக்டர் வாய்ப்புகள் வருகிறதாம். ’நளனும் நந்தினி’யும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.
வந்தனா மைக்கேல்...
சீரியலுக்கு ’குட் பை’: சினிமா நடிகையானார் ‘பகல் நிலவு’ ஷிவானி
கணவருடன் இணைந்து விஜய் டிவியில் ’மிஸஸ் சின்னத்திரை’, ’பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். சும்மா வீட்டில் இருப்பது வந்தனாவுக்கு ரொம்பவும் பிடிக்குமாம். அதனால் இந்த லாக்டாவுனை வீட்டிலிருந்து என்ஜாய் செய்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களிடம் இருந்து நிறையவே வித்தியாசப் படுகிறார் வந்தனா. ஷாப்பிங் செய்வது பிடிக்காது என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் வந்தனாவுக்கு அது சுத்தமாக வராதாம். அவர் போடும் டிரஸ் உள்ளிட்ட அனைத்துமே வந்தனா வாங்கியது இல்லையாம். அனைத்தையும் அவரது அம்மா தான் வாங்கி வருவாராம். அந்தளவுக்கு எதுவுமே செய்யாமல் வீட்டில் இருப்பது வந்தனாவுக்கு மிகவும் பிடிக்குமாம். அமைதியாக இருக்கும் இடம் மட்டும் தான் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். ஷூட்டிங் தளத்தில் மட்டும் தான் நண்பர்களுடம் பேச்சு அரட்டை எல்லாமே. வீட்டுக்கு போனதும் ரொம்ப அமைதியாக யார் கிட்டயும் பேசாமல் தனிமையை என்ஜாய் செய்வாராம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”