அழகு : அப்புவுக்கு என்னைவிட நல்ல அப்பா கிடைப்பாங்களா?

Tamil Serial News: சுதாவை காப்பாற்ற வந்த ரவி, இடையில் புகுந்து படக்குன்னு சுதாவின் கழுத்தில் தாலி கட்டிடறான்.

Tamil Serial News: சுதாவை காப்பாற்ற வந்த ரவி, இடையில் புகுந்து படக்குன்னு சுதாவின் கழுத்தில் தாலி கட்டிடறான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sun TV Azhagu Serial, Tamil Serial news, ravi, sudha, poorna

Sun TV Azhagu Serial, Tamil Serial news, ravi, sudha, poorna

Sun TV, Azhagu Serial: அழகு சீரியலில் அழகம்மை மூத்த மகன் ரவியும், சுரேந்தரும் நல்ல நண்பர்கள். இருவரும் இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். சுரேந்தர் சுதாவை காதலித்து, பெற்றோர் சம்மதம் கிடைக்காமல் திருமணம் செய்துக்கறான். சென்னையில் வசிக்கும்போது, ஒரு விபத்தில் சுரேந்தர் இறந்துவிட, சுதாவுக்கு இங்கு குழந்தை பிறக்கிறது. சுதாவுக்கு ரவி குடும்பமே ஆதரவாக இருக்கிறார்கள். ரவி, சுதாவின் குழந்தை மீது அவ்ளோ பாசமாக இருக்கிறானாம். சரி அது இருக்கட்டும்... எப்போதுமேவா குழந்தை என்ன செய்யறான்.. என்ன செய்யறான்னு நண்பனின் மனைவிக்கு போன் செய்து விசாரிப்பது?

Advertisment

’விட்டமின் டி’ வாங்கும் ஆண்ட்ரியா: ’டிரடிஷனல்’ நிவேதா தாமஸ் – படத் தொகுப்பு

சுதாவின் மாமியார் வீடு ரொம்ப கொடுமை படுத்தறவங்களா இருக்காங்க. சுதாவை, சுரேந்தர் தம்பி வந்து சொந்த ஊர் ஆந்திராவுக்கு அழைச்சுட்டு போயிடறான். சுதாவையும், குழந்தையையும் நினைத்துக்கொண்டே இருக்கான் ரவி. ஊருக்கு கிளம்பி போறான். அம்மா எங்கே போறேன்னு கேட்கும்போது, ஆபீஸ் வேலைன்னு சொல்லிட்டு போறான். நல்லவனா இருந்தா, அம்மாகிட்டே எதுக்கு பொய் சொல்லணும்?

Advertisment
Advertisements

சுரேந்தர் தம்பி சுதாவின் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலி கட்டத் துடிக்க, போலீஸ் பாதுகாப்போடு சுதாவை காப்பாற்ற வந்த ரவி, இடையில் புகுந்து படக்குன்னு சுதாவின் கழுத்தில் தாலி கட்டிடறான். கேட்டால், சுதா உங்களை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலைன்னு சொல்றான். சுரேந்தர் தம்பி செய்தது குற்றம் என்றால், ரவி செய்ததும் குற்றம்தானே? இந்த குற்றத்தை செய்துட்டு வந்த ரவிக்கு மண்டையில் அடிபட்டு, சுதாவின் கழுத்தில் தாலி கட்டின விஷயம் மட்டும் மறந்து போகுது.

கொரோனா பரவல் விகிதம்: தமிழ்நாடு- இதர மாநிலங்கள் ஒப்பீடு

அத்தை பெண் பூர்ணாவை கல்யாணம் செய்துக்கத் தயாராகிறான். ம்ம்.. அப்புறம் பாருங்க.. சுதா கழுத்தில் தாலி கட்டினத்துக்கு அவன் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? உனக்கு யாரை வேணும்னா இவங்க கல்யாணம் செய்து வைக்கலாம். ஆனால், என்னை விட அப்புவுக்கு நல்ல அப்பா கிடைக்க மாட்டாங்கன்னு சொல்றான். லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்புத்தான்... சும்மா பாருங்க அழகு சீரியலை!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: