சந்திரலேகா: பாருங்களேன்... இயக்குநரே மறந்து போயிட்டார்!

Sun TV, Chandralekha: 6 வருஷமா இப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடு நடுவில் எத்தனையோ கதாபாத்திரங்கள் வந்து வந்து போயுள்ளன.

Sun TV, Chandralekha: 6 வருஷமா இப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடு நடுவில் எத்தனையோ கதாபாத்திரங்கள் வந்து வந்து போயுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandralekha Serial, Sun TV, Tamil Serial News

Chandralekha Serial, Sun TV, Tamil Serial News

Tamil Serial News: சன் டிவியில் கடந்த 6 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த 'சந்திரலேகா' சீரியல், லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து மறு ஒளிபரப்பாகி வருது. என்ன கொடுமை சார்னு கேட்கும் அளவுக்கு 6 வருஷமா ஒரு சீரியல் சத்தம் இல்லாம ஒளிபரப்பாகி வருது. இதில் நடித்தவர்கள் சின்ன பெண்களாக வந்து இப்போது தோற்றத்தில் பெரிய பெண்ணாகவும் மாறி விட்டார்கள். நாயகி சுவப்னா பெங்காலி பொண்ணு. வில்லி நடிகை நாகஸ்ரீ பெங்களூரு பொண்ணு. இவர் இப்போது திருந்தி நல்ல பெண்ணாகவும் மாறி விட்டார். இவரை வளர்த்த அம்மா இன்னும் வில்லியாக இருக்கிறார்.

’இதை செய்ய முடியுமா?’ : ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி

Advertisment

6 வருஷமா இப்படி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடு நடுவில் எத்தனையோ கதாபாத்திரங்கள் வந்து வந்து போயுள்ளன. இதனால் தான் இந்த சீரியலை 6 வருடம் இழுக்கடிக்க முடிந்ததோ என்று கூட நினைக்க வைக்கிறது. சந்திராவும், லேகாவும் பிறந்த அன்றிலிருந்தே பெற்ற தாயிடம் இருந்து மாறி வளர்கிறார்கள். அதாவது சந்திராவை பெற்ற அம்மாவிடம் லேகாவும், லேகாவைப் பெற்ற அம்மாவிடம் சந்திராவும் என்று பிறந்த நாள் முதல் வளர்கிறார்கள். இந்த உண்மை லேகாவின் அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும். கடைசியில் லேகாவின் அம்மாவுக்கு சந்திராவின் அம்மா அண்ணி தான். இருந்தாலும் என் குழந்தையை மாத்தி எடுத்து நீங்க வளர்க்கறீங்கன்னு சொல்றதுக்கு பயம். காரணம் அவங்க பணக்காரங்க. அதோடு கதையின் வில்லி. இப்படி போகுது கதை. உங்களுக்கு சொன்னா புரியாது.. பார்த்தால்தான் புரியும்.. 6 வருஷ கதையாச்சே!

ஆறு வருஷத்துக்கு பிறகு, மாறின குழந்தைகளின் உண்மையான அம்மா யாருன்னு ரெண்டு பெண்களுக்கும் அதாவது சந்திரா,லேகா ரெண்டு பெண்களுக்கும் தெரிஞ்சு போகுது. அப்போ கூட ஆரம்பத்தில் யாரோ ஒரு அம்மா மாதிரி தன்னை நெருங்கி நெருங்கி வந்தது நம்ம அம்மா தான்... இவங்களை அப்படி அவமானப் படுத்தி இருக்கோம்.. எப்படி எல்லாம் அவமானப் படுத்தினோம் என்று லேகாவால் நினைத்து பார்த்து, தனது அம்மாவிடம் மன்னிப்பு கேட்க முடியலை. காரணம் என்ன தெரியுமா, ஆறு வருஷத்துக்கு முன்னால் எடுத்த பல காட்சிகளை இயக்குனராலேயே ரீவைண்ட் செய்து பார்க்க முடியாமல் காலம் கடந்தும் அந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவது தான்.

Advertisment
Advertisements

இது என்ன கொடுமை! சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேரும் ஆஸி., கிரிக்கெட் ஊழியர்கள்

இப்போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், தொடர்ந்து சீரியல் பார்த்து வரும் மக்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிய வந்து இருக்கு. நம்ம அம்மாவை தான் பண திமிரில் நாம் இந்த பாடு படுத்தி இருக்கோம். அம்மாவை கை நீட்டி அடிச்சு இருக்கோம்.. இதை எல்லாம் கூட சொல்லி அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, லேகாவுக்கு காட்சிகள் வைக்காமல் இருந்து இருக்காரே இயக்குநர் என்று இப்போது எண்ணம் வருகிறது. பணத் திமிரில் தன்னை பெற்ற அம்மாவை என்ன பாடு படுத்தி இருக்கிறோம் என்று ஒரு பெண் திருந்தி மன்னிப்பு கேட்பது போல காட்சி வைக்காமல் விட்டது ஏனோ என்கிற எண்ணம் இப்போது சீரியலை ஆரம்பத்தில் இருந்து பார்க்கும் அனைத்து பார்வையாளருக்கும் வருகிறது. மெகா சீரியல்.. மெகா சீரியல் என்று எபிசோடுகளை கடத்த தான் பார்க்கிறார்களே தவிர, தங்களது சீரியல் பயணத்தில் பல விஷயங்களுக்கு தீர்வு சொல்வதில்லை இயக்குனர்கள் என்று தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tv Serial Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: