Tamil Serial News: சீரியல்களை தமிழக மக்களுக்கு கொண்டுச் சென்றதில், சன் டிவி-க்கு முக்கியப் பங்கு உண்டு. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்மணி’ சீரியல் மக்களிடையே நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் லீசா எக்லெர்ஸ்.
’பேபி கம்மிங் சூன்’ மைனா நந்தினியின் ஸ்பெஷல் ஃபோட்டோ!
மார்டன் உடையில் லீசா
சீரியலில் படு பவ்யமாக கண்ணன் மாமாவின் மீது உயிரையே வைத்திருக்கும் இவருக்கு பொதுவாக சீரியல் பார்க்கும் பழக்கமே கிடையாதாம். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது திருமதி செல்வம் சீரியல் அவ்வப்போது பார்த்திருக்கிறாராம். அந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன் நாமும் நடிப்போம் என கனவில் கூட அவர் நினைக்கவில்லையாம் லீசா.
கண்மணி சீரியலில் ஆரம்பத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தார்கள். அதனால் ஹீரோ கதாபாத்திரத்துக்கு ஜோடி யார்? என ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். பின்னர் தான் செளந்தர்யா ஜோடியானார். நடிகை லீஷா எக்லர்ஸ் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், 1991-ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தார். சென்னையிலுள்ள எத்திராஜ் கல்லூரியில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு, மாடலிங் செய்ய தொடங்கினார்.
லீசா எக்லெர்ஸ்
இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்திருக்கிறார் ’பலே வெள்ளைய தேவா’ படத்தில் அறிமுகமாகி, ’பொது நலன் கருதி’, ’மடை திறந்து’, ’என் அன்புள்ள லிசா, ’தெறிக்க விடலாமா’ போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இதில் என் அன்புள்ள லிசா படத்தில், லிசா என்னும் பேயாக நடித்திருக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காததால் சீரியலில் குதித்து விட்டார்.
நம்ப முடியுதா? ஜோடியில் கலக்கிய நேத்ரன் மகள் அபிநயா தான் இவங்க!
தற்போது கதாநாயகிகளுக்கு போட்டியாக போட்டோ ஷூட்டும் நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் இணையதளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. மாடல் உடையை விடவும், புடவையில் தான் அதிகமான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”