Sun TV Magarasi Serial: வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை திவ்யா கலந்துக் கொண்டார். இவர் சன் டிவியின் மகராசி சீரியலில் ராஹினியாக நடித்து வருகிறார். 'கேளடி கண்மணி' சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையான திவ்யா, மேக்கப் பொருட்கள் வாங்குவதில் அலாதி பிரியம் காட்டுவாராம். அத்தனை மேக்கப் பொருட்களையும் தனது முகத்தில் நேர்த்தியாக போட்டுக்கொள்வதிலும் கில்லாடி. மகராசி சீரியலில் பார்த்தாலே தெரியும். நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தாலும், அது மைல்டாக தெரியும்படி தனது மேக்கப் கைவண்ணத்தை நிரூபித்து இருப்பார்.
44 நாட்கள், 31 வெளி மாநில தொழிலாளர்கள் : பண்ணை வீட்டில் பாதுகாத்த பிரகாஷ் ராஜ்
ராமநாதபுரத்து பெண்ணான திவ்யா, வளர்ந்தது படித்தது எல்லாம் ராமநாதபுரம் தான். பி.எல் படிக்க மதுரைக்கு அனுப்பலாம் என்று வீட்டில் திட்டம் இருக்க, கல்யாணம் ஆகி சென்னைக்கு செட்டில் ஆன அக்கா, சென்னையில் படிக்கலாம் என்று அழைத்து வந்தாராம். அப்போது அக்காவின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு சீரியல் இயக்குனர், தனது சீரியலில் நடிப்பாங்களா என்று கேட்க, பயத்தில் மறுத்து விட்டேன் என்று கூறுகிறார் திவ்யா. கொஞ்ச நாள் கழிச்சு, சரி போய்த்தான் பார்ப்போமே என்று சென்றதன் விளைவுதான் நடிகையானது என்றும் கூறுகிறார்.
சன் டிவியின் சுமங்கலி சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்த இவருக்கு, மகராசி சீரியலில் ராஹினியாக நடிக்கும் வாய்ப்பும் வந்துள்ளது. என்றைக்காவது ஒரு நாள் சட்டம் படித்தே தீருவேன்.. படிப்புத்தான் கடைசி வரை கைக்கொடுக்கும் என்பது தனது எண்ணம் என்றும் கூறுகிறார். பெங்களூரு, கேரளா போன்ற சவுத் இண்டியன் கேர்ள்ஸ் மட்டும் இல்லாமல், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய ஊர்களில் இருந்து தமிழ் சீரியல்களில் நடிக்க பெண்கள் வந்து இருக்கும் நிலையில், இப்போது தமிழ் நாட்டு பெண்களும் நிறைய பேர் நடிக்க வந்து இருப்பது ரொம்ப வரவேற்கத்தக்கது என்று கூறுகிறார் திவ்யா.
இசைக் குடும்பத்திலிருந்து வந்த நடிப்புப் புயல் : ஸ்ரீ துர்கா
சின்னத்திரை சீரியல்களில் நடிக்க நிறைய தமிழ் பெண்கள் வர வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறும் திவ்யாவுக்கு, மதுரை ஜிகர்தண்டா என்றால் உயிர். இப்போது இந்த கோடை காலத்தில் குடிக்க முடியாமல் போனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”