Sun TV, Nayagi Serial: கலிவரதன் துரத்த, துரத்த, ஆனந்தி திருவின் கல்யாணம் ரொம்ப கோலாகலமாவே நடந்து முடிஞ்சுருச்சு. தடுக்கப் புறப்பட்ட கலிவரதனுக்கு கல்யாணம் எங்கே நடக்கிறது என்றே தெரியவில்லை. வீடியோ காலில் வந்த சற்குணம், இடம் தெரிஞ்சா உன்னால கண்டு பிடிக்க முடிஞ்சா வந்து இந்த கல்யாணத்தை தடுத்து பாருடான்னு சவால் வேற விட்டுட்டாங்க. பாவம் இந்த வயதிலும் கூட காரிலும், கோயிலுக்குள் நடந்து ஓடியும் ஆனந்தி திருவைத் தேடித் புடிச்சு கல்யாணத்தை நிறுத்திடணும்னு முயற்சிக்கிறார். கல்யாணத்தை எப்படி நடத்தாம இத்தனை எபிசோட் இழுத்தடிக்க முடியும். ஒரு வழியா சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தி, திருவுக்கு கல்யாணம் நடந்துருச்சு.
சென்னை வாள்சண்டை வீராங்கனைக்கு அர்ஜூனா விருது பரிந்துரை
அடுத்தது என்ன...? அதுக்குத்தான் நாள் பார்த்து இருக்காங்க. ஆனால், கண்ணாடியில் முகம் பார்த்து தலையை சீவிக்கொண்டு இருக்கும் ஆனந்தி, அன்னிக்கு என்னவோ திருவின் கண்களுக்கு பேரழியாகத் தெரிகிறாள். அவன் மெதுவாக வந்து, அழகிய முடியை ஒதுக்கிவிட்டு, இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கே ஆனந்தின்னு கொஞ்சறான். என்ன இன்னிக்கு கன்னா பின்னான்னு ஐயாவுக்கு ரொமான்ஸ் கொட்டுதுன்னு கேட்கிறாள் ஆனந்தி. இப்போதெல்லாம் டிவி சீரியல்களிலும் ரொமான்ஸ் இருந்தால் தான் அந்த சீரியல் சூப்பர் ஹிட் ஆகுது. திரு இதையா சொல்ல முடியும்...? இன்னிக்கு இவ்ளோ அழகா இருந்தா ரொமான்ஸ் பிச்சுக்கிட்டுத்தா வரும். அதிலும் கழுத்தில் இருக்கும் இந்த மச்சம்.. செம அழகா இருக்கு ஆனந்தின்னு சொல்றான். விடுங்க.. ஆஃபீஸ் போக வேணாமா என்று நழுவுகிறாள் ஆனந்தி. இன்னிக்கு லீவு போட்டுடேன் என்று கெஞ்சுகிறான் திரு.
’கணவருக்காக பிரேக் எடுத்திருக்கிறேன்’: ‘வண்ண வண்ண பூக்கள்’ வினோதினி
நிறைய லீவ் போட்டாச்சு திரு.. அதுக்குத்தான் நாள் பார்த்து இருக்காங்களே.. என்ன அவசரம் என்று தனது கயல் விழிகளை உருட்டி உருட்டி கேட்கிறாள் ஆனந்தி. நல்லா பசிச்சுகிட்டு இருக்கும்போது சாப்பாடு கொடுக்காம, நாள் நட்சத்திரம் பார்த்து கொடுக்கறேன்னா என்ன அர்த்தம் ஆனந்தி என்று இன்னும் காதல் போதை தெளியாதவனாக கேட்கிறான். என்ன திரு.. குழந்தையாட்டமா, டிஃபன், லஞ்செல்லாம் கிடையாது. நேரா டின்னர் தான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க சரியா. என்று சொல்லி வாங்க சாப்பிட போகலாம் என்று அவனது கையைப் பிடித்து இழுத்துப் போகிறாள் ஆனந்தி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”