Sun TV, Nayagi Serial: சன் டிவியின் 'நாயகி' சீரியலில் வசந்தியாக நடிக்கும் மீரா கிருஷ்ணன், தனக்கு வில்லியாகவும், நகைச்சுவையாகவும் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார். மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன மீரா கிருஷ்ணன், ஜெயா டிவியின் 'பொக்கிஷம்' சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ’நாயகி’ சீரியல் வாய்ப்பு நடிகை அம்பிகாவின் மூலம் கிடைத்தது என்றும், ஆடிஷன் எல்லாம் ஒன்றும் இல்லை நேரா ஆக்ஷன்தான் என்றும் கூறினார். ”அம்பிகாவுடன் பல வருடங்களுக்கு முன் மலையாள படத்தில் நடித்த அறிமுகம் இருந்தது என்றாலும், நாயகி சமயத்தில் அம்மா கேரக்டருக்கு இயக்குநர் குமரனிடம் அம்பிகா மேம் தான் ரெஃபர் செய்தாங்க.. எப்படி என் நினைவு அவங்களுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் ஆச்சரியம் தான்” என்றும் மீரா கிருஷ்ணன் கூறுகிறார்.
’வாத்தி கம்மிங் ஒத்து’: ‘அரண்மனைகிளி’ மீனாட்சியம்மாவின் ‘மாஸ்’ டான்ஸ்!
இரண்டரை வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொண்ட மீராவுக்கு இன்னும் டான்ஸ் என்றால் உயிர். நடிகர் விஜய் டான்ஸ், லாரன்ஸ் மாஸ்டர் டான்ஸ் வேற லெவல் என்று கூறுகிறார். இவரது கணவர் சிவா லாரன்ஸ், லாரன்ஸ் மாஸ்டரின் உதவி நடன இயக்குனர். ’திருமலை’ படத்தில் வரும் ’தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து’ என்கிற பாடலுக்கு நடிகர் விஜய் மற்றும் லாரன்ஸ் மாஸ்டருக்கு நடுவில் டான்ஸ் ஆடி இருப்பார். ’நாயகி’ சீரியலில் வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்கும் மீராவுக்கு, ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று என 2 சின்னஞ்சிறு குழந்தைகள்.
நாயகி சீரியலில் கலிவரதனுக்கு பொருத்தமாக அதே சமயம், இரண்டு வளர்ந்த பிள்ளைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கொஞ்சம் வெயிட் போட்டுவிட்டு நடிக்க வந்ததாக கூறுகிறார். சன் டிவி சீரியலில் நடிப்பது என்பது தனது கனவுகளில் ஒன்று என்றும், சன் டிவி சீரியலில் நடிப்பது பிரஸ்டீஜ் இஸ்யூவாக இண்டஸ்ட்ரியில் பார்க்கப்படுகிறது என்றும் கூறிய மீரா கிருஷ்ணன், ”தமிழ்நாட்டு மக்கள் சோ ஸ்வீட். அன் கண்டிஷனல் லவ்வு வச்சு இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டு இருக்கேன்” என்றும் கூறினார்.
கமல் – இளையராஜா எவர் கிரீன்: பாடலை பாடி அசத்திய ஷ்ருதி ஹாசன்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.