Sun TV, Pandavar Illam: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா, அன்பு மச்சானிடம் முத்தம் வேணும்னு கேட்கிறாள். பாண்டவர் குடும்பத்தை சேர்ந்த ஆண்களுக்குத்தான் பெண்கள் என்றாலே பிடிக்காதே... எப்படி மல்லிகா முத்தம் கேட்டால் மட்டும் அன்பு கொடுத்துவிடுவான்? ஆனாலும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிருச்சு. சின்ன பசங்களை வச்சு அன்பு மச்சானை கட்டிப்பிடிக்கும்போது வீடியோ எடுத்து வச்சுக்கிட்டா மல்லிகா. அதை வச்சு ஆசைப்பட்ட அன்பு மச்சானை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பது மல்லிகாவின் நினைப்பு. அதே மாதிரி அடிக்கடி காய் நகர்த்தி காரியத்தை சாதிச்சுக்கறா மல்லிகா.
இப்போதும் போனில் இருக்கும் அந்த வீடியோவை டெலிட் பண்ணிரு மல்லின்னு கெஞ்சிகிட்டு வயலோர மரத்தடியில் நிற்கிறான் அன்பு சுந்தரம். மச்சான். எனக்கு ஒரு முத்தம் குடு. உடனே இந்த வீடியோவை டெலிட் பண்ணிடறேன்னு சொல்றா மல்லிகா. முதலில் அன்புக்கு மனமொப்பவில்லை. சரி விடு.. நான் போறேன் என்று மல்லிகா பிகு பண்ணிக்கிறாள். இரு இரு நான் தரேன்னு அவளை இருக்க வைக்கிறான் அன்பு. மச்சான் நிசமாத்தான் முத்தம் தரேன்னு சொல்றியான்னு கேட்டுகிட்டே மல்லிகா கிட்டே வர, அவன் கண்களை மூடிக்கொண்டு வாயை குவித்தபடி மல்லிகாவின் அருகில் வருகிறான். மல்லிகா ஓடிச்சென்று மரத்துக்கு பின்னால் ஒளிந்துக்கொள்கிறாள்.
Advertisment
Advertisements
அப்போது பார்த்து தாத்தாவும், அண்ணன் நல்ல சுந்தரமும் வந்துவிட , என்னடா செய்யறே அன்புன்னு சத்தம் போடறார் தாத்தா. ஒன்னும் இல்லை தாத்தான்னு அன்பு சொல்ல, இல்லைடா நாங்க வரும்போது வாயை குவிச்சுக்கிட்டு இப்படி போனியே அது எதுக்குன்னு கேட்கிறார் தாத்தா. நல்லான் வேற முத்தம் குடுக்க வந்த மாதிரி நின்னேடா எதுக்குன்னு அதட்டுகிறான். இல்லை தாத்தா மல்லின்னு இவன் உளர. மல்லியா? கொத்த மல்லியா சாதி மல்லியான்னு கேட்டு திணற அடிக்கிறார் தாத்தா. கடைசியா தாத்தாவை ஏமாற்ற நினைச்ச அன்பு, இது ஒரு யோகா தாத்தா. மனசில் இருக்கும் அழுக்கு எல்லாம் இந்த யோகா செய்தால் போயிரும்னு சொல்றான். அப்படியா நல்லாருக்கே.. யாரு சொல்லிக் கொடுத்த யோகா இதுன்னு கேட்கிறார் தாத்தா. பழனி சித்தர் சொன்னது தாத்தான்னு சொல்லி மேலும் மேலும் ஏமாத்தறான்.
இந்த யோகாவுக்கு பேர் வச்சு இருப்பங்களே என்ன பேரு அன்புன்னு தாத்தா மறுபடியும் கேட்கிறான். அது அது வந்து டெலிட் யோக தாத்தா.. மனசில் இருக்கும் அழுக்கை எல்லாம் அழிக்கிறதுனால இது டெலிட் யோகானு சொல்றான் அன்பு. அப்புறம் என்ன பாண்டவர் இல்லம் வீடு முழுக்க எல்லாரும் டெலிட் யோகா செய்யறாங்க. உம்மா.. உம்மா என்று வீடு முழுக்க சத்தம் கேட்குது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”