Rasathi Serial : அஞ்சு லிட்டர் பசும் பாலில் ரெண்டு காபிதானா?

Devayani Serial : நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் ஜமீனாக கதையில் வந்தார். நாட்டாமை மாதிரி கம்பீரமாக கர்ஜித்தார்.

Devayani Serial : நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் ஜமீனாக கதையில் வந்தார். நாட்டாமை மாதிரி கம்பீரமாக கர்ஜித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rasathi Serial, Sun tv

Rasathi Serial

Tamil Serial News : ராசாத்தி சீரியலில் 5 லிட்டர் பசும்பாலை சுண்ட காய்ச்சி ரெண்டு காபி போட்டு குடிச்சா.. என்னா டேஸ்ட்டு...என்று ராசாத்தியிடம் சொல்லி வெறுப்பேத்திட்டு போறா மேனகா. ராசாத்தி சீரியல் ஆரம்பிச்ச புதிதில் வேறு மாதிரி களைக்கட்டியது... இப்போ அப்படி ஒரு விஷயமும் இல்லை.. எப்படி எப்படியோ திசைத் திருப்பி முக்கிய கதாபாத்திரம் விஜயகுமார், விசித்திரா என்று ஒருத்தரும் இல்லாமல் கதை பழி வாங்கும் நோக்கில் வீறு நடை போட்டு வருகிறது.

Advertisment

கண்மணி சீரியல் : உங்க ட்விஸ்டுக்கு அளவே இல்லையாப்பா…?

பாண்டியன் மேல ஆசைப்பட்டு மேனகா, தானே குடிசைக்குள் புகுந்து குடிசையை கொளுத்திவிட்டு அதில் மாட்டிக்கொண்டது போல கூச்சல் போடுகிறாள். பாண்டியன் தன்னை காப்பாத்துவான்னு நினைச்சு தப்புக் கணக்குப் போட, பாண்டியன் போட்ட கணக்குப்படி பாண்டியனின் தம்பி மாதவன் மேனகாவை உள்ளே புகுந்து காப்பாத்தி வெளியில் கொண்டு வந்துட்டான். பாண்டியன் தான் தன்னை காப்பாத்தினான்னு நினைச்சு.. என்னை காப்பாத்தினவன் என்னை முழுசா பார்த்துட்டான். என்னை இனி வேற யாரு கல்யாணம் செய்துக்குவாங்க என்று ஊரை கூட்டி கூச்சல் போடறா மேனகா.

இளவரசி சவுந்திரவல்லி என் தம்பிக்கே உன்னை கட்டி வைக்கறேன்னு மேனகாக்கிட்டே சொல்ல, மேனகா பாண்டியனுடன் கல்யாணம் என்று கனவில் மிதக்கிறாள். கடைசியில் பார்த்தால் மாதவன்.. என்னை காப்பாத்தினது பாண்டியன்தான்னு மேனகா கூச்சல் போட.. இல்லை மாதவன்தான் உன்னை காப்பாத்தினான். வேணும்னா இந்த வீடியோவைப் பாருன்னு சொல்றாங்க. பேசாம தலையை குனிஞ்சுக்கிட்டே மாதவன் கட்டின தாலியை கழுத்தில் வாங்கிக்கிறாள் மேனகா.

இருந்தாலும், பாண்டியனும் ராசத்தியும் கல்யாணம் செய்துக்க கூடாது.. அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சே தீருவேன்னு பகையோட அந்த குடும்பத்தில் மருமகளா போறா. இப்போ போட்டி மேனகாவுக்கும், ராசாத்திக்கும்தான். பாண்டியனும், மாதவனும் சவுந்திரவல்லியின் தம்பிங்க.. இருந்தாலும் பாண்டியனுக்குத்தான் கதையில் மவுசு. அவனுக்குத்தான் மேனகாவும் அடிச்சுக்கறா. ராசத்தியும் அவனைத்தான் காதலிக்கிறாள். பாண்டியன் ராசாத்தியைத்தான் காதலிக்கிறான்.

Advertisment
Advertisements

தமிழக பொறியாளர்களுக்கு சூப்பர் சான்ஸ், மிஸ் பண்ணாம பாருங்க

நடிகர் விஜயகுமார் ஆரம்பத்தில் ஜமீனாக கதையில் வந்தார். நாட்டாமை மாதிரி கம்பீரமாக கர்ஜித்தார். பொசுக்குன்னு அவரை கொன்னுட்டாங்க. இப்போ அந்த குடும்பத்து பெண் ராசாத்தி கோயில் திருவிழாவை நடத்தி முடிச்சுட்டு கல்யாணம் செய்துக்கணும். அதுக்கு முன்னால் வீட்டில் சூரியன் எழுவதற்கு முன் செயய் வேண்டிய பூஜைக்கு வச்சிருந்த 5 லிட்டர் பாலைத்தான் பழி வாங்கறேன்னு சொல்லிக்கிட்டு அரை லிட்டர் பாலா சுண்டக் காய்ச்சி.. ரெண்டு காபி போட்டு குடிச்சுட்டேன்னு ராசாத்திக்கிட்டே சொல்லி அவளை வெறுப்பேத்தறா மேனகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: