Tamil Serial News: சினிமாவைப் போலவே சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். டாக்டர் பாரதி, அவனது மனைவி கண்ணம்மாவை மையமாக வைத்த கதை.
சீரியலில் மிரட்டல் வில்லி: நிஜத்தில் படு அமைதி – வந்தனா மைக்கேல்!
கண்ணம்மாவுடன் பாரதிக்கு திருமணமானாலும், அவன் மீது அஞ்சலி, வெண்பா என இரண்டு பெண்கள் ஆசைப்படுகின்றனர். கண்ணம்மாவிடமிருந்து பாரதியைப் பிரித்து, அந்த இடத்திற்கு தாங்கள் வர வேண்டும் என்பதே அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணமும். கண்ணம்மா அப்பாவின் இளையதாரத்தின் மகள் அஞ்சலி. அவளை பாரதியின் தம்பி அகிலனுக்கு பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால் அவளுக்கோ, பாரதியைப் பிடித்து விடுகிறது. இருப்பினும் அவனை அடைவதற்காக, அகிலனை திருமணம் செய்துக் கொள்கிறாள்.
அக்கா என்றபோதிலும், கண்ணம்மாவுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறாள். போதாக்குறைக்கு, பாரதியுடன் மருத்துவ கல்லூரியில் படித்த வெண்பாவுக்கும், அவன் மீது காதல். இன்னொரு பெண்ணும் அவன் மீது ஆசைப்பட, அவளை கொல்வதற்காக விபத்து ஏற்படுத்துகிறாள் வெண்பா. அதில் பாரதிக்கும் அடிபட்டு விடுகிறது. தனக்காக அவன் காத்திருக்க வேண்டும் என்பதற்காக, இனி உனக்கு குழந்தை பிறக்காது, என பொய் சொல்லி விடுகிறாள் வெண்பா. இதற்கிடையே கண்ணம்மா கர்ப்பமாகிறாள். சந்தோஷப் படும் பாரதியை தனது வில்லத்தனங்களால் குழம்ப விடுகிறாள்.
அது தன் குழந்தை தான் என்பதில் உறுதியாக இருக்கிறான் பாரதி. இருப்பினும் அவனது குழப்பம் தெளியவில்லை. இதனை வெளியில் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல், தடுமாறுகிறான். பாரதி முன்பு போல தன்னிடம் இல்லை என்பதால் மனமுடைந்துப் போகிறாள் கண்ணம்மா.
இந்நிலையில் பரிகாரம் செய்ய குடும்பத்துடன் கோயிலுக்குப் போயிருக்குறார்கள். ‘நீ கட்டாயம் இந்த பூஜைல கலந்துக்கணும்’ என கட்டளையிடுகிறார் அம்மா செளந்தர்யா. ஆனால் அங்கு கண்ணம்மாவின் கணவன் பாரதி அங்கு வரவில்லை. அவனுக்காக அனைவரும் காத்திருக்க, அகிலன் தன் அண்ணனுக்கு திரும்ப திரும்ப ஃபோன் செய்கிறான். ஆனால் பாரதியோ அதை கட் செய்து விடுகிறான். பின்னர் ‘அந்த பரிகாரத்த நானே செய்றேன்’ என முதுகில் பூட்டிய தேரை இழுத்து வருகிறார் கண்ணம்மாவின் மாமியார் செளந்தர்யா.
சீரியலுக்கு ’குட் பை’: சினிமா நடிகையானார் ‘பகல் நிலவு’ ஷிவானி
இதைப் பார்த்து நெகிழ்ந்துப் போன கண்ணம்மா, ‘அம்மா இல்லாம வளந்த பொண்ணு நான். கோவில்ல உங்கள பாத்தேன். என்னோட கண்ணுக்கு நீங்க அத்தையா தெரில. அம்மாவா தெரிஞ்சிங்க. நான் உங்கள அம்மான்னு கூப்பிடலாமா அத்த’ எனக் கேட்கிறாள். கண்ணீருடன் தலையாட்டிய மாமியார் அவளை அணைத்துக் கொள்ள, ‘அம்மா’ என்கிறாள் கண்ணம்மா. இந்தக் காட்சி பார்வையாளர்களிடம் உணர்வுப்பூர்வமாக பலத்த கை தட்டல்களைப் பெற்றது!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”