Vijay TV Serial : ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றியும் மலரும் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்குப் பிறகு இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்கிட்டாங்கன்னு தெரிஞ்சதும் மாமியார் என்னத்த சொல்ல முடியும்? அஞ்சலி வெற்றியை காதலிச்சவள்.. ஆனால், வெற்றி அஞ்சலியை கல்லூரித் தோழியாக மட்டுமே பார்த்து வந்தவன்.
வெற்றியின் அண்ணனை காதலித்தவள் தான் மலர்.. அவன் கல்யாணத்துக்கு முதல்நாள் வேண்டும் என்றே லாரியில் விபத்து ஏற்படுத்தியதில் இறந்து விடுகிறான். உடனடியாக மலரை மாப்பிள்ளையின் தம்பி வெற்றிக்கு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். எதிர்பாராமல் நடந்த விபத்து, உடனே காதலித்தவனின் தம்பியோடு கல்யாணம் என்று நிலைகுலைந்து போயிருக்கும் மலர் எத்தனையோ கஷ்டங்களை மாமியார், நாத்தனாரிடம் அனுபவிக்கிறாள்.
மலரை எப்படியாவது வீட்டை விட்டுத் துரத்திட்டு வசதியான வீட்டு பெண் அஞ்சலியை வெற்றிக்கு கல்யாணம் செய்து வைக்கணும் என்பது மாமியார், நாத்தனார் திட்டம். இவர்கள் அஞ்சலியுடன் சேர்ந்து செய்யும் சதியில் மலரால் வெற்றியைப் பற்றி ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு வழியாக வெற்றி முதலில் மலரிடம் தனது காதலை சொல்கிறான். அடுத்து நீண்ட அவகாசம் எடுத்து மலரும் தனது காதலை வெற்றியிடம் சொல்லிவிட்டாள். இதுவரையான இவர்களின் பயணம் இருக்கிறதே... அதுக்குத்தாங்க ஃபேன்ஸ்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ரொமான்ஸ் என்று ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்து இருந்தனர்.
Advertisment
Advertisements
ஒரு வழியா முதலிரவுக்கும் தயாராகிவிட்ட மலர், அப்பா அம்மாவிடம் சொல்லி நாள் பார்க்க சொல்கிறாள். அப்பா அம்மா நாள் பார்த்தவர்கள் சம்பந்தியிடம் அதாவது வெற்றியின் அப்பாவிடம் சொல்லிவிடுகிறார்கள். இவர்கள் இருவரும் தனியாக இருக்கட்டும் என்று மனைவி மற்றவர்களை பூர்வீக வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்துப் போய் விடுகிறார். இங்கு இருவருக்கும் முதலிரவு என்று தெரிந்துக்கொண்ட அஞ்சலி, அதை கெடுக்க வெற்றிக்கு சரக்கு பாட்டில் வாங்கித் தருகிறாள். நம்ம புள்ள விவரமானவன் ஆச்சே.. குடிக்க மாட்டேன் என்று மலரிடம் சத்தியம் வேறு செய்து இருக்கான்.
வெற்றிக்கும் மலருக்கும் முதலிரவு ஜோராக நடந்து விடுகிறது. இதைக் கேள்விப்பட்ட அஞ்சலி மலரின் நாத்தனார் ஈஸ்வரியிடம் சொல்ல, நாத்தனார், அம்மாவிடம் சொல்ல, அம்மா புருஷனிடம்.. இதுக்குத்தான் எங்களை பூர்வீக வீட்டுக்கு அழைச்சுட்டு போனீங்களா என்று கோபமாக கேட்கறாங்க. ஏன் நம்ம பையனுக்கும் மருமகளுக்கும் முதலிரவு நடக்கரத்தில் உனக்கு சந்தோசம் இல்லையா? நீதானே வாரிசு வேணுன்னு அவங்களுக்கு 6 மாசம் டைம் கொடுத்தேன்னு கேட்க, பேச முடியாமல் திரும்பிடறாங்க மாமியார்.
என்ன சின்னம்மா சித்தப்பாவை திட்டமா வந்துட்டேன்னு மகள் கேட்க, ஏண்டி.. அவர் சொல்றதிலும் நியாயம் இருக்குல்லடி.. நான் எதாவது பேசினா அசிங்கமாகிடாதுன்னு சொல்லிட்டு போயிடறாங்க., இனிமே சின்னம்மாவை நம்பி பிரயோஜனமில்லை பவுனு.. நாமளே களத்துல இறங்கி மலர் வெற்றியை பிரிக்கணும்னு முடிவெடுக்கறாங்க. இதுதாங்க ஈரமான ரோஜாவே கதை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”