Vijay TV Pandian Stores Serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை தோசை போட ஆரம்பிச்சுட்டா. ஏங்க.. தோசை நல்லாருக்கான்னு முல்லை கேட்க... கதிர் நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம். கதிர் வளரும் பையனாம், நிறைய சாப்பிடணுமாம். அதனால சாப்பிடுங்க என்று சொல்கிறாள் முல்லை. என்னது வளர்ற பையனா என்று ஒரு நிமிஷம் திக்கு முக்காடி போயிட்டான் கதிர். இல்லைங்க.. கடைக்கு போயி வேலை எல்லாம் செய்யறீங்க. சாப்பிட்டு தெம்பா இருக்க வேணாமான்னு சமாளிக்கிறாள்.
அது சரி என்று தட்டைப் பார்த்து கதிர் சாப்பிட ஆரம்பிக்கிறான். அப்போது பார்த்தால் ஒவ்வொரு தோசையும் ஊத்தப்பம் மாதிரி இருக்குது. ஏதோ பேப்பர் ரோஸ்ட் போட்டு சாப்பிட கொடுத்து, இன்னும் சாப்பிடுங்க சாப்பிடுங்க என்று சொன்னால் தேவலை. ஸைஸ் தோசையை போட்டுட்டு, தட்டு நிறைய அடுக்கி வச்சா எப்படி. இதுல வேற, சாப்பிடுங்க... எனக்கு கை எல்லாம் ஒன்னும் வலிக்கலைன்னு சொல்லிகிட்டே தோசை ஊற்றுகிறாள். அந்த தோசை யாருக்கு உனக்கா? என்று கேட்கிறான் கதிர். இல்லைங்க உங்களுக்குத்தான் என்று முல்லை சொல்ல சடனா மயக்கம் போட்டு கதிர் விழுவான்னு பார்த்தால், இது வெறும் ப்ரோமோ தாங்க. இன்னிக்கு ராத்திரி சீரியல் பார்த்தால் தெரியும்.
விஜய் டிவி இந்த லாக்டவுன் நேரத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மட்டும் மறு ஒளிபரப்பு செய்து வருது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதை ரொம்ப மென்மையான கதை. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை போரடிக்காமல் சின்னத்திரையில் சொல்லி சபாஷ் வாங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் கூட்டு குடும்பம், பெண்களின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் ஒற்றுமை என்று இதற்காக சீரியல் பார்த்து வந்த மக்கள், நாளடைவில் முல்லை கதிர் இருவரின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவும், இவர்கள் போடும் செல்ல சன்டைக்காகவும் சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். இதை கவனித்த விஜய் டிவி , மறு ஒளிபரப்பை சரியாக முல்லை கதிர் கல்யாணத்தில் இருந்து செய்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”