புடிச்சவங்களுக்காக இப்படி எல்லாமா ஹெல்ப் பண்ணுவீங்க?

கடைக்குட்டி கண்ணன், போனில் ஏதோ ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை எடுத்துப் பார்க்கிறான்.

By: Updated: July 28, 2020, 02:00:34 PM

Pandian Stores: கொரோனா வைரஸ் காரணமாக சினிமா சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், 60 பேர் கலந்துகொண்டு கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்தது.

நடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்!

அதன்படி சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட முன்னணி சேனல்கள் நேற்று முதல், புதிய எபிசோடுகளை ஒளிபரப்பி வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக பழைய எபிசோட்களைப் பார்த்து வந்த சீரியல் ரசிகர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், நேற்று முதல் இரவு 7.30 மணிக்கு தனது புதிய ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

அண்ணன் தம்பி 4 பேர். அவர்களில் மூன்று பேருக்கு திருமணம் ஆகியிருக்கும். மூத்த அண்ணன் மூர்த்தியும், அவரது மனைவி தனமும் குடும்பத்திற்காக நிறைய தியாகங்களை செய்திருப்பார்கள். ஜீவா – மீனா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மூன்றாவது ஜோடியான கதிர் – முல்லை இருவரும் எலியும் பூனையுமாக இருந்து, பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் காலப்போக்கில் இருவரும் பரஸ்பரம் அன்பு செலுத்த தொடங்குவார்கள். குறிப்பாக கதிர் முல்லை ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் இருக்கும் படியாக இருக்கும்.

யூ-ட்யூப் நேரலை விவகாரம்: வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்நிலையில் விஜய் டிவி தற்போது ஒரு மினி வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளது. அதில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அனைவரும் கார்ட்ஸ் விளையாடுகின்றனர். அப்போது எந்த கார்டை போட்டால் வெற்றிபெறலாம், என்ற குறிப்பை கதிருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி இருக்கிறாள் முல்லை. ஆனால் கதிரோ தனது போனை பார்க்கவில்லை. இதனால் போனை பார்க்கும்படி கதிருக்கு சிக்னல் தருகிறாள் முல்லை. இதனை கவனித்த கடைக்குட்டி கண்ணன், போனில் ஏதோ ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை எடுத்துப் பார்க்கிறான். அப்போது அதில் நிறைய குறுஞ்செய்தி இருப்பதைப் பார்த்து என்ன அண்ணி இங்க உட்கார்ந்து கிட்டு அண்ணனுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பியிருக்கீங்க என்றவாறு மெஸ்ஸேஜை திறந்தால், முல்லையின் கள்ளத்தனம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. மேலும் என்ன நடந்தது என்பதை இன்று இரவு பார்ப்போம்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil serial news vijay tv pandian stores promo kathir mullai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement