Tamil Serial News: விஜய் டிவி-யில் தினமும் இரவு 9.30 மணிக்கு ‘செந்தூரப்பூவே’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் முதன் முறையாக, சினிமாவிலிருந்து, சின்னத்திரைக்குள் நுழைந்திருக்கிறார் ரஞ்சித். நடுத்தர வயது (45) கொண்ட துரைசிங்கத்தைப் பற்றிய கதை. மனைவியை இழந்த இவர் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகன். இவருக்கு கயல்விழி மற்றும் கனிமொழி என இரண்டு அழகான மகள்கள் உள்ளனர். அவரது மனைவி அருணா இறந்த பிறகு, மறு திருமணம் பற்றி துரைசிங்கம் யோசிக்கவில்லை.
சீரியலில் தான் அம்மா, மாமியார்: நிஜத்திலோ மகள்களுக்கே டஃப் ஃபைட் தரும் தீபா நேத்ரன்!
இதற்கிடையே துரை சிங்கத்தின் மகள்கள் தங்களது ஆசிரியை ரோஜா மீது உயிராய் இருக்கிறார்கள். துரை சிங்கத்தின் அம்மாவும், தங்கையும் ஜோசியரை பார்க்க சென்றபோது, ‘உங்க செல்ல பேத்தி கயல்விழியோட ஜாதக படி, உங்க மகனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கற யோகம் இருக்கு’. அந்த பொண்ண, கயலே கூட செலக்ட் பண்ணலாம் ‘ என்றார் ஜோசியர். பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டுக்கு வரும் ஆசிரியை ரோஜாவிடம், பிள்ளைகள் அன்பாக இருப்பதைப் பார்த்து மொத்தக் குடும்பமும் சந்தோஷப் படுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து, துரை சிங்கத்துக்கு, ரோஜாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள், அவரது அம்மாவும், தங்கையும்.
ஆனால் ரோஜாவோ அன்புவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டவள். இந்த திருமணத்தை எதிர்க்கும் ரோஜாவின் மாமா, அன்புவை கொன்று விடுகிறார். ஆனால் அன்புவின் குழந்தை ரோஜாவின் வயிற்றில் வளர்கிறது. இதற்கிடையே துரை சிங்கத்துக்கும், ரோஜாவுக்கும் முறைப்படி திருமணத்தை பேசி முடிக்கிறார்கள். குடும்பத்தினரின் கட்டாயத்துக்கு மத்தியில் சூழ்நிலை கைதியாகிறாள் ரோஜா.
நவம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் முதலாம் ஆண்டு வகுப்புகள் : கல்வி அட்டவணை வெளியீடு
இப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், “துரை சிங்கம் சார நேர்ல பாத்து என்ன பத்தின எல்லா உண்மையையும் சொல்ல போறேன், என் வயித்துல அன்போட குழந்தை வளருதுனும் சொல்றேன்” என்கிறாள் ரோஜா. கையில் விஷ பாட்டிலுடன், “எப்போதுமே இந்த உண்மைய சொல்ல மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு” என மிரட்டுகிறார் அவளது தாய். கோயிலில் ரோஜாவை சந்திக்கும் துரை சிங்கம், ”இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இல்லாத மாதிரியும், எல்லாரும் சேந்து உன்ன வற்புறுத்துற மாதிரியும் தெரியுது. என்னவா இருந்தாலும் தயங்காம சொல்லு” என்கிறார். அதற்கு, “நடந்த எல்லா விஷயத்தையும் உங்கக் கிட்ட சொல்லிடுறேன் சார். நான் அன்புன்னு ஒருத்தர காதலிச்சேன். அவரோட குழந்தை என் வயித்துல வளருது சார். இனி நீங்க தான் உங்க முடிவ சொல்லணும்” என்கிறாள். அப்படியே உறைந்து போகிறார் துரை சிங்கம். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”