Vijay TV Thenmozhi BA : விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் அருள் கொஞ்சம் கொஞ்சமாக பொண்டாட்டி தேன்மொழி பக்கம் சாயும் காலம் வந்துவிட்டது. என்ன தான் தேன்மொழியின் மதர் இன் லா இருவரையும் பிரித்து வைக்க நினைத்தாலும், அப்பத்தா கைக்கொடுத்து தேன்மொழியை தூக்கி விட்டுட்டாங்க. மெதுவா வீட்டுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டாச்சு... அடுத்து, தினம் குடிச்சுட்டு வரும் அருளை திருத்தணும்.. என்ன செய்வது? அடுத்த அஸ்திரத்தை பயன்படுத்த தேன்மொழிக்கு சொல்லிக் கொடுத்திட்டாங்க அப்பத்தா. குடிச்சுட்டு வந்த போது நிலை தடுமாறி தன்னுடன் சந்தோஷமாக இருந்ததாக ஒரு போட்டோவையும் காண்பித்து பொய்யை உண்மை போல் நிரூபித்து விட்டாள் தேன்மொழி.
இயக்குநர் பாரதிராஜா ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் திடீர் மரணம்
சும்மா ஆடிப்போயிட்டான் அருள். என்னடா பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்படியா தப்பு பண்ணி இருக்கோம்.. சே இனிமே குடிக்கவே கூடாதுடா சாமி என்று பில்லா படத்தில் அஜீத் மாதிரி முடிவெடுக்கிறான் அருள். உடனே இதை வீட்டில் சொல்லியாகணுமே. அண்ணன், நண்பன் இருவரும் இருக்கும்போது. அண்ணா எனக்கு இப்போ ஒரு புது சக்தி கிடைச்சு இருக்குன்னு சொல்றான். என்னடா உளறுறே என்று கேட்ட அண்ணனிடம்.. இல்லைண்ணே எனக்கு உடம்புக்குள்ளேருந்து ஒரு புது சக்தி வந்து கையிலே நிக்குது. ஒரு மலையை தூக்க சொன்னா கூட இப்போ தூக்கிருவேன்னு சொல்றான். என்னடா தம்பி சொல்றேன்னு அண்ணன் கேட்க, ஆமாண்ணே.. நான் சரக்கடிக்கறதை நிறுத்தி 24 மணி நேரம் ஆச்சு அதான் இந்த சக்தின்னு சொல்றான்.
சிறந்த நடிகர் மட்டுமில்லை அருண் விஜய் மிகச் சிறந்த அப்பாவும் கூட நீங்களே பாருங்கள்!
12, 2020
இப்போ ஆடிப்போனது அருளின் நண்பன். என்னடா சொல்றே என்று அதிர்ச்சியாகிறான். என்னடா தம்பி புது வருஷம் வந்தா தான் எதாவது கெட்ட பழக்கத்தை விடுவோம்னு சபதம் எடுப்போம் நீ என்ன என்று கேட்கிறான். அதற்குள் நண்பன் அப்போது கூட முதல் நாள் ராத்திரி சபதம் எடுத்துட்டு அடுத்த நாள் சபதத்தை தூக்கிப் போட்டுடுவோமேடா என்று சொல்கிறான். இல்லடா நம்ம தேனு இல்லே என்று அருள் சொல்ல, ஆமாம் இருக்கா.. என்று இவர்கள் சொல்ல, அவதான் என் கண்ணைத் தொறந்துட்டா என்று சொல்கிறான். அப்போ அங்கு வந்த தேன்மொழி மகிழ்ச்சியில் சிரிக்கிறாள். மதர் இன் லா பொங்கி வரும் கோபத்தோடு என்ன சொன்னான் இவன் என்று நிற்கிறார்கள். என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”