Vijay TV Serial : 'தேன்மொழி பி.ஏ' சீரியலில் ஊராட்சி மன்றத் தலைவின்னா இப்படி இருக்கணும்னு சொல்ற அளவுக்கு தேனு தேறிட்டா. மாமனார் போட்ட திட்டத்தை முறியடிச்சுட்டு, தண்ணீர் லாரி டேங்கில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கெத்து காண்பிச்சு வர்றா. தண்ணீர் லாரி வரும்னு மக்கள் குடத்தோட காத்துகிட்டு நிற்க. துள்ளி எழுந்து லாரியில் இருந்து குதிச்சு தண்ணீர் பைப்பை திறந்து விடுகிறாள்.
’கல்யாணம் தான் ஆகப் போகுதே’: பெண்களே இந்த விஷயத்தில் உஷார்
அவ லாரியில் இருந்து குதிக்கும் அழகை பார்த்து வாய் பிளந்த பெண்கள் அடி ஆத்தின்னு மெச்சிக்கறாங்க. வாங்க என் பின்னாடி வாங்கன்னு தேன்மொழி கூப்பிட்டு மக்களின் குடத்தை தண்ணீரில் நிரப்பி அனுப்பறா. என்னடா புள்ளை பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்ச மாதிரி ஆகிப் போச்சேன்னு மாமனார் செய்வது அறியாமல் விக்கித்து பார்க்கிறார்.
மாமியார் கேட்கவே வேணாம். வளர விட்டுபுட்டீங்கன்னு புலம்பறாங்க. உண்மையில் ஊராட்சி மன்றத் தலைவியா வளர்ந்தது என்னவோ தேன்மொழி தான். இவளை இந்த குடும்பம் வளைச்சுபோட்டு கல்யாணம் கட்டிக்கிட்டு, இப்போ அதிகாரம் பறி போயிருச்சேன்னு புலம்பறாங்க. காதல் மயக்கத்தில் இருந்த தேன்மொழி ஊருக்கு ஒரு பிரச்சனை, அதுவும் காந்தி நகருக்கு ஒரு பிரச்சனை என்றதும் சும்மாவா இருப்பாள்? அடடா.. நாம் தானே இந்த ஊராட்சி மன்றத் தலைவர்னு விஏஓ ஆலோசனையுடன் சமர்த்தா நடந்துக்கறா.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: முடிவ கொஞ்சம் மாத்திக்கலாமே தனம்?
மக்களுக்கு தண்ணீர் தரேன்னு கிளம்பி இருக்கும் தேன்மொழி பிஏ என்று பிஏ- வை அழுத்தி சொல்லி நக்கலடிக்கும் மாமனார், அவ குழாயைத் திறந்தால் தண்ணீர் வரக் கூடாது, வெறும் காத்துதேன் வரணும்னு கேட்வால் எல்லாம் மூடி வச்சுட்டார். தண்ணீர் வரல.. காத்துதான் வந்தது. ஆனால், தேன்மொழி மூளை வேலை செய்து உடனே தண்ணீர் லாரியை கொண்டு வந்துட்டா. ஊராட்சி மன்றத் தலைவர்னா இப்படித்தான் இருக்கனும்னு மக்கள் பேசற அளவுக்கு தேன்மொழி பிஏ சூப்பர்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"