Zee Tamil: ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்தார்கள். அதில் ரஜினியை நேர்காணல் செய்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. எத்தனையோ ஹீரோயின் கூட நடிச்சு இருக்கீங்க. ரஜினி ஸ்ரீதேவி, ரஜினி ஸ்ரீபிரியா, ரஜினி அம்பிகா, ரஜினி குஷ்பூ, ரஜினி கவுதமி என்று இத்தனை காம்போ பார்த்து ரசிச்சு இருக்கோம், உங்களுக்கு பிடிச்சது எந்த காம்போ சார் என்று கேட்டபோது, ரஜினி தயங்காமல் படாஃபட் ஜெயலட்சுமி என்று கூறினார். அதுக்குப் பிறகு அது மாதிரி படம் ஒண்ணும் பண்ணினது இல்லை என்று சொன்னவர், பிறகு ராதிகாவை சொல்லலாம் என்று சொன்னார். நல்லவனுக்கு நல்லவன் படத்தை நினைவு கூர்ந்தார்.
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு : ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி. வீடியோ வெளியீடு!
உலக நாயகன் உங்களை பற்றி சொல்லும்போது தாராள மனத்துக்காரர் என்று சொல்றார். அதே மாதிரி நீங்க அவரை சொல்றீங்க. என்ன மாதிரி நட்பு சார்? அதை பற்றி சொல்லுங்கள் என்றபோது, நான் இங்கே நடிக்க வருவதற்கு முன்பே கமல் அல்ரெடி சூப்பர் ஸ்டார். காலேஜ் பொண்ணுங்க, எல்லார் மத்தியிலும் கமல்னா ரொம்ப கிரேஸ் இருந்துச்சு. நான் அப்போது தான் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிச்சு வந்தவன். எனக்கு கார் கூட கிடையாது. சூப்பர் ஸ்டாரா இருக்கும் போதே கமல் என்னை அவர் காரில் டிராப் செய்வார். அப்போதே எனக்கு கமல் பக்கத்துல நானான்னு கிள்ளி பார்த்துக்கும் நிலைமை தான். சோ, அவரை அந்த இடத்துல தான் வச்சு இருக்கேன் என்று கூறினார் சூப்பர் ஸ்டார்.
‘இதற்கு காரணம் என் கணவர் தான்’: ஆச்சர்யமூட்டும் சமந்தா!
எப்போதாவது நாம ஒரு ஸ்பெஷல், அதனால தான் இத்தனை புகழ் என்று நினைத்து இருக்கீங்களா என்று கேட்டபோது, திடீர்னு அடிக்கடி பட வாய்ப்பு. பஸ் கண்டெக்டரா 350 ரூபாய் சம்பளம் வாங்கிகிட்டு இருந்தேன். திடீர்னு 3 லட்சம், 4 லட்சம் சம்பளம் கிடைச்ச உடனே, ஆஹா நாம ரொம்ப ஸ்பெஷல்னு நினைச்சேன். அப்புறமாத்தான் தெரிஞ்சுது, ஒண்ணும் ஸ்பெஷல் இல்லை. எல்லாம் நேரம், என்று சொல்லி சிரித்தார் ரஜினிகாந்த்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”