மேஜிக் மேனாக மாறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய மாதவன்!

2 பேட்ச்களில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லி, மீதமிருந்த 1 பேட்ச்சையும் நீக்கினார். மீதம் 4 கார்டுகள் இருந்தது.

By: Updated: July 14, 2020, 05:34:43 PM

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’விக்ரம் வேதா’ படத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது. இருவரின் கதாபாத்திரமும் பார்ப்பவர்களை, புருவம் உயர்த்த செய்யும். இதில் விக்ரம் என்ற போலீஸ் அதிகாரியாக மாதவனும், வேதா என்ற கேங்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள். இங்கு எதுவும் நல்லதும் அல்ல, கெட்டதும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் இன்னொரு பாதை இருந்திருக்கிறது என்பதை களமாக வைத்து படம் இயக்க பட்டிருந்தது.

நாட்டாமை டீச்சருக்கும் டிக் டிக் டீச்சருக்கும் என்ன சம்பந்தம்?

இந்தப் பட ப்ரமோஷனின் ஒரு பகுதியாக ’விக்ரம் வேதா’ குழுவினர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ’அன்புடன் டிடி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள். அப்போது கார்டில் மேஜிக் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் மாதவன். சீட்டுக் கட்டுகளில் ஒரு கார்டை செலக்ட் செய்துக் கொள்ள மாதவன், பின்னர் அதனை மற்ற கார்டுகளுடன் கலந்து விட்டார். பின்னர் நான்கு நான்காக, 4 பேட்ச் பிரித்து, பார்வையாளர்களை அழைத்து 2 பேட்சை செலக்ட் செய்ய சொன்னார். பின்னர் மற்ற 2 பேட்சையும் அகற்றிவிட்டார். மீதமிருந்த 2 பேட்ச்களில் ஒன்றை செலக்ட் செய்ய சொல்லி, மீதமிருந்த 1 பேட்ச்சையும் நீக்கினார். மீதம் 4 கார்டுகள் இருந்தது. அப்போது பார்வையாளரிடம் 2 கார்டுகளை செலக்ட் செய்ய சொன்னார், இப்போது மீதமிருந்த மற்ற 2 கார்டுகளும் நீக்கப்பட்டன. இறுதியாக 2 கார்டுகளில் ஒன்றை டிடி-யை தொட சொன்னார். அந்த கார்ட் தான் முன்பு டிடி தேர்ந்தெடுத்தது.

சேலையில் கவர்ச்சி: இணையத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் தர்ஷா தான்!

இதைப்பார்த்த டிடி-யும், ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அட்டகாசமான மேஜிக்கை செய்துக் காட்டினார் மாதவன்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Tamil tv show anbuden dd vikram vedha madhavan magic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X