தவற விடக் கூடாத தமிழ் வெப் சீரிஸ்!

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர்தான் OTT தளம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர்தான் OTT தளம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Must Watch Web Series in Tamil

Must Watch Web Series in Tamil

Tamil Web Series: கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக வெப் சிரீஸ் இந்திய சந்தையில் ஊடுருவ முயற்சிக்கிறது. இருப்பினும், நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர்தான் OTT தளம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. இப்போது தமிழில் நிறைய வெப் சிரீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளித்திரை நட்சத்திரங்கள் கூட, ஓடிடி-யில் தங்கள் பார்வையை திருப்பியிருக்கிறார்கள். சரி... தமிழில் தவற விடக் கூடாத வெப் சிரீஸ்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

குறைந்த நேரத்தில் சத்தான சாம்பார்: குக்கரில் செய்யும் முறை

குயின்

Advertisment

மறைந்த தமிழக முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது குயின்.  அனிதா சிவகுமாரனின் குயின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 11-எபிசோட்களைக் கொண்ட சீசன் 1-ஐ இயக்குநர்கள் கெளதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கினர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எம்.எக்ஸ் பிளேயரில் இந்த வெப் சிரீஸ் வெளியானது.

ஆட்டோ சங்கர்

70 மற்றும் 80-களில் தமிழ்நாடு சென்னையில் தீவிரமாக செயல்பட்ட தொடர் கொலையாளி ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதில் அப்பானி சரத் கதாநாயகனாக நடித்துள்ளார். 1985 முதல் 1995 வரை சென்னையின் பின்னணியில் ஆட்டோ ஷங்கர் நகர்கிறது. ரங்கா இயக்கிய இந்த தொடர் 10-பகுதிகளைக் கொண்டது. இதனை ஜீ-5-ல் காணலாம்.

ருசியான தேங்காய்ப் பால் சாதம்: குக்கரில் செய்வது எப்படி?

இரு துருவம்

குற்ற விசாரணை த்ரில்லர், சஸ்பென்ஸ், திருப்பங்கள் மற்றும் உணர்வுகள் நிறைந்தது இரு துருவம். இதில் நந்தா துரைராஜ் மற்றும் அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர். எம்.குமரன் இயக்கியுள்ள இதன் 9 பகுதி, SonyLIV-ல் ஒளிபரப்பாகிறது.

Advertisment
Advertisements

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: