Advertisment

Thuppakki Munai in Tamilrockers : தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் துப்பாக்கி முனை லீக்

Thuppakki Munai Full Movie Leaked in Tamilrockers: துப்பாக்கி முனை படம் லீக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thuppakki Munai

Thuppakki Munai

Thuppakki Munai Movie Leaked in Tamilrockers : நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தை தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்தது.

Advertisment

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு எண்கவுண்டர் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். .ஹன்சிகா மோத்வானிக்கு இது 50வது படம் ஆகும். இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார்.

Thuppakki Munai Leaked in Tamilrockers : துப்பாக்கி முனை லீக்

ராசமதி என்பவர் ஒளிபதிவு செய்துள்ளார். துப்பாக்கி முனை படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் விக்ரம் பிரபுவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கடந்த டிசம்பர் 14ம் தேதி வெளியானது.

துப்பாக்கி முனை விமர்சனம் : ஷார்ப்பான மெசேஜ் சொல்லும் விக்ரம் பிரபுவின் 'துப்பாக்கி முனை'

இதே படத்துடன் இணைந்து பிரசாந்தின் ஜானி படமும் ரிலீஸ் ஆனது. ஆனால் இரண்டு படங்களில் துப்பாகி முனை படமே பொதுமக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

Johnny Review : ஜானி... டாப் ஸ்டார் கம் பேக் படம் எப்படி?

இந்நிலையில், இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் தங்களின் இணையத்தளத்தில் சட்டவிரோதமாக லீக் செய்துள்ளனர். படம் வெளியாகி முழுமையாக 7 நாட்கள் கூட ஆகாத நிலையில் தமிழ்ராக்கர்ஸின் இந்த் சட்டவிரோத செயல் படக்குழுவினரிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment