Arvind swamy as MGR in Thalaivi : தலைவி படத்தில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. யார்றா, எம்ஜிஆரே மறுபடியும் வந்துட்டாரானு நினைக்குற அளவுக்கு நிஜ எம்ஜிஆர் ஆகவே மாறியிருக்கிறார் நம்ம அரவிந்த் சாமி.
Arvind swamy as MGR in Thalaivi : தலைவி படத்தில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. யார்றா, எம்ஜிஆரே மறுபடியும் வந்துட்டாரானு நினைக்குற அளவுக்கு நிஜ எம்ஜிஆர் ஆகவே மாறியிருக்கிறார் நம்ம அரவிந்த் சாமி.
mgr, mgr birthday, thalaivi, jayalalitha, biopic, director a l vijay, mgr birthday, mgr first look, arvind swamy, mgr character, kangana ranaut, queen, director gautham vasudev menon, webseries
தலைவி படத்தில் எம்ஜிஆர் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. யார்றா, எம்ஜிஆரே மறுபடியும் வந்துட்டாரானு நினைக்குற அளவுக்கு நிஜ எம்ஜிஆர் ஆகவே மாறியிருக்கிறார் நம்ம அரவிந்த் சாமி.
Advertisment
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார். ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டீசர், படம் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், எம் ஜி ஆர் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தலைவி படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
Here is my first look as Puratchi Thaliavar, Makkal Thilagam MGR in #Thalaivi . A teaser follows at 10.30 am today. Hope u like it ???? pic.twitter.com/LjnN6Ybwrw
நிஜ எம்ஜிஆர் போலவே, அரவிந்த் சாமியின் தோற்றம் வடிமைக்கப்பட்டுள்ளது. படம் பார்ப்பவர்களுக்கு, நிஜ எம்ஜிஆரே நடிப்பது போன்ற உணர்வை அரவிந்த் சாமி ஏற்படுத்த உள்ளார்.
திரையுலகில் 30 வருடங்களாக நடித்து வருகிறார் அரவிந்த் சாமி. தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஸ்டைலிஷ் வில்லன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி. 2015-ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. அந்த படத்திற்கு பிறகு வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்ற லாஜிக் திரையுலகில் வலம் வர துவங்கியது.
ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்கும் கங்கனா ரனாவத் படத்துடன் ஒட்டவில்லை என்று பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், படக்குழு எம்ஜிஆர் கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் சாமியின் தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த வெப் சீரிஸ், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி பெரும்வரவேற்பை பெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.