’விஜய்யோட ஹார்ட்கோர் ஃபேன் நான்’ – இலங்கை அரசியல்வாதி

Namal Rajapaksha: விஜய்க்கு தமிழ்நாட்டிற்கு வெளியேவும் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

By: Updated: April 22, 2020, 09:06:39 PM

Thalapathy Vijay : தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவில் பெரும்  ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட முன்னணி நடிகர். எப்போதுமான இளமை, அசைக்க முடியாத நடனம், சண்டைத் திறன், நகைச்சுவை டைமிங், பவர் ஃபுல் டயலாக் டெலிவரி உள்ளிட்ட அம்சங்களால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறார்.  விஜய்க்கு தமிழ்நாட்டிற்கு வெளியேவும் பல லட்சக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்கு இதோ மற்றொரு எடுத்துக்காட்டு.

Corona Updates Live : ’கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி’ – எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்

இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நமல் ராஜபக்ஷே ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஹார்ட்கோர் விஜய் ரசிகர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். நமல் பகிர்ந்த படத்தில், அவர் தளபதி விஜய்யின் ‘பிகில்’ படத்தை தனது மடிக்கணினியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். “7 நாள் சவாலின் 7 வது நாள். பெரும்பாலும் வீட்டில் ரிலாக்ஸாக இருக்கிறேன். எனக்கு பிடித்த திரைப்படங்களில் ஒன்றைப் பார்க்க விரும்பினேன். எல்லா நேரத்திலும் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்யின் பிகில்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

’என் கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுங்கள்’: மருத்துவர் சைமனின் மனைவி கண்ணீர்

கடல் கடந்து இப்படி பல லட்சம் ரசிகர்களை விஜய் பெற்றிருப்பதால், உள்ளூர் ரசிகர்கள் பெருமையடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Thalapathy vijay fan namal rajapaksa bigil movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X