Thalapathy Vijay: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்!
எஸ்.பி.பி இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட விஜய்யை அவரது ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர். இதனால் விஜய்யை பாதுகாப்பாக வெளியேற்ற காவல்துறையினர் முயன்றனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் ரசிகர்கள் கீழே விழுந்தனர். அப்போது தாமாக முன் வந்து ரசிகர்களின் காலணிகளை எடுத்துக் கொடுத்தார் விஜய். இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யாராலும் வெறுக்கப்படாத கலைஞன்! மனிதநேய மாண்பாளன்! இளையநிலா எஸ்.பி.பி
தவிர, எஸ்.பி.பி-யின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட ஒரே முன்னணி நடிகர் விஜய் என்பது குறிப்பிடத் தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”