ஜனனி - சந்தோஷ் வாழ்க்கையில் வீசிய சக்தி எனும் புயல் வீசியது. சக்தியைக் காதலித்த சந்தோஷ், சூழ்நிலையால் ஜனனியை திருமணம் செய்துக் கொண்டான். சக்தியை மறக்கவும் முடியாமல், ஜனனியுடன் வாழவும் முடியாமல் தவித்தான். பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு நடந்த அனைத்து விஷயங்களுக்கும் நான் தான் காரணம் என ஜனனி, சந்தோஷிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, அவர்களை சேர்த்து வைத்துவிட்டு மலேசியா திரும்பினாள் சக்தி.
ஜனனியின் விரும்பங்களை புரிந்துக் கொண்டு, அதனை ஒவ்வொன்றாக பூர்த்தி செய்ய முயல்கிறான் சந்தோஷ். இதற்கிடையே முன்பு பல பிரச்னைகளை சந்தித்த வேளையில், தன்னுடைய டயரியில், தனது ஆசைகளை எழுதி வைத்திருந்தாள் ஜனனி. இதனை அவளுக்கு தெரியாமல் படித்த சந்தோஷ், அவற்றை எல்லாம் செய்து ஜனனியை மகிழ்விக்க விரும்புகிறான். அதன்படி அவளை வெளியில் அழைத்துச் செல்கிறான். வீட்டிலிருந்து யாரும் ஃபோன் பண்ணி தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, இருவரது ஃபோனையும் சந்தோஷே ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறான்.
Advertisment
Advertisements
அந்த நாள் மாயா - ஹரீஷ் தம்பதிகளுக்கு திருமண நாள். ஜனனியும், சந்தோஷும் வெளியில் கிளம்பிப் போக, தங்களுக்கு திருமண நாள் என்று தெரிந்தே அவர்கள் வெளியில் சென்றதாக கணவரிடம் கொளுத்திப் போடுகிறாள் மாயா. அதையெல்லாம் விட்டுத் தள்ளிட்டு கோயிலுக்கு வா, என்று ஹரீஷ் சொல்ல, ஒருவழியாக இருவரும் கோயிலுக்கு செல்கிறார்கள். மறுபுறம் ஜனனியை கோயிலுக்கு தூக்கிக் கொண்டு வருகிறான் சந்தோஷ். அந்த கோயில் அதிக படிக்கட்டுகளைக் கொண்டது. உடல்நிலை சரியில்லாததால், ஜனனி அதிகமாக கஷ்டப்படக் கூடாது, என மருத்துவர் கூறியிருக்கிறார். அதனால் தான் அவளை தூக்கிச் செல்கிறான் சந்தோஷ். இதைப் பார்த்த மாயாவுக்கு பயங்கர டென்ஷனாகிறது.
”கோயில்ல எப்படி நடந்துக்கணும்ன்னு கூட தெரில. பாக்குறவங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க. இதுக்கு மேல இங்க இருக்கணுமா” என கணவனிடம் எரிந்து விழுந்தவாறே, அங்கிருந்து வீட்டிற்கு திரும்புகிறாள். எது எப்படியோ சந்தோஷ் - ஜனனியின் காட்சி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.