Advertisment

எம்.பி.யின் ட்வீட்டுக்கு பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

”அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்”

author-image
WebDesk
New Update
Udhayanidhi Stalin apologies R Parthiban

உதயநிதி ஸ்டாலின்

திமுக எம்.பி செந்தில்குமாரின் ட்வீட்டுக்கு நடிகர் பார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

Advertisment

காதலரை கரம் பிடிக்கும் ஜீ தமிழ் வில்லி நடிகை!

நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படம் கடந்தாண்டு வெளியாகி சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு பல விருதுகளையும் வென்றது. கோவாவில் நடைபெற்ற தேசிய திரைப்படவிழாவில் ஒத்த செருப்பு படம் திரையிடப்பட்ட போது, இந்தியன் பனோரமா சார்பில் அப்படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசிதழில் வெளியானது.

அந்த செய்தியை குறிப்பிட்டு, ‘அண்ணணுக்கு பா.ஜ.கல ஒரு சீட்டு பார்சல்ல்’ என ட்விட்டரில் தெரிவித்திருந்தார், திமுக எம்.பி.செந்தில்குமார். இதற்கு பதிலளித்த நடிகர் பார்த்திபன், “இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம், வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை)

பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்”என்று sweet-ஆக tweet-ட்டி wit-டிருக்கிறார். செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால், நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்.

திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?” என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர் தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும், சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப்படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காதபோது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனே தவிர, அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!” என வரிசையாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ரத்தம் வழிய விஜய்யைப் பார்க்க சென்ற ’பாரதி கண்ணம்மா’ செந்தில் குமாரி!

அதன் பின் தனது வேறொரு ட்வீட்டில், “கடைசியாக வந்த செய்தி - சூரியன் உதிக்கும் முன் கண் விழித்த எனக்கு, திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Udhayanidhi Stalin R Parthipen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment