Vaigaipuyal Vadivelu : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக ’சைக்கோ’ திரைப்படம் வெளியானது. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் மற்றும் ராஜ்குமார் நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்ததாக விஷால் மற்றும் பிரசன்னாவுடன் இணைந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கத் தொடங்கினார் மிஷ்கின். ஆனால் இந்தப் படம் எதிர்பாராத சிக்கலை எதிர் கொண்டது.
ஒட்டகச்சிவிங்கிக்கும் டர்பன் கட்டிக்கொள்ள ஆசை வந்துருச்சோ – வைரலாகும் வீடியோ
விஷலுக்கும் மிஷ்கினுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக, துப்பறிவாளன் 2 படம் முதல் கட்ட படபிடிப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளை விஷால் தானே இயக்குகிறார். இந்நிலையில், சமீபத்தில், நடிகர் சிம்புவிடம் மிஷ்கின் ஒரு கதையை சொல்லியதாகவும், அதற்கு சிம்பு தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய செய்திகள் Live : மக்கள் மன்ற நிர்வாகிகளை நாளை மீண்டும் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
இந்தப் படம் குறித்த சமீபத்திய தகவல்களின் படி, சிம்புவுடன் வைகைப்புயல் வடிவேலு, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். அனைத்தும் பாஸிட்டிவாக அமைந்தால், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இயக்குநர் ஹரி இயக்கத்தில் சிம்புவும், வடிவேலுவும் இணைந்து கோவில் படத்தில் நடித்திருந்தனர். இவர்களின் காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vadivelu next with simbu in mysskin movie
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி