வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமண சர்ச்சை மீண்டும் தலைப்புச் செய்தியாகி வரும் நிலையில், அவரது மூத்த மகன் தனது அப்பா மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான வனிதா, ஜூன் 27-ஆம் தேதி சினிமா டெக்னீஷியன் பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அடுத்தநாளே அவரது முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னிடமிருந்து விவாகரத்து பெறாமல், பீட்டர் வனிதாவை மணந்துக் கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார். அதோடு, பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்றும், அவரை இரண்டு முறை மறுவாழ்வு மையத்தில் அனுமதித்ததாகவும் ஹெலன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து வீடியோ வெளியிட்ட வனிதாவோ பீட்டருக்கு குடிப்பழக்கமே கிடையாது, எங்கள் திருமணத்தின்போது கூட அவர் ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் பீட்டர் பாலின் மகன் ஒரு வெப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். கல்லூரியில் படித்து வரும் அவர் தன் தந்தை பற்றி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ”என் அப்பாவுக்கு குடிப்பழக்கமே இல்லை என்று வனிதா சொல்வதில் உண்மை இல்லை. என் தந்தையை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த பிறகு அம்மா, தங்கை, நான் மூவரும் பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டோம். என் அப்பா மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்படி சுவர் ஏறிக் குதிக்க முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டது.
எனக்கும், இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த பெண்ணின் வயிற்றில் என் குழந்தை வளர்கிறது என்று அப்பா சொன்ன பிறகு அவருடன் பேசுவதை அம்மா நிறுத்திவிட்டார். இந்த சம்பவம் நடந்தபோது என் தங்கைக்கு இரண்டு வயது தான். ஒரு நாள் என் அப்பா குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்து அம்மாவுக்கு பதில் புது ஆண்ட்டியை கூட்டிட்டு வரட்டுமா என்று என்னிடம் கேட்டார். இதையே என் அம்மாவிடமும் கூறினார்.
என் அப்பாவுக்கும், பிற பெண்களுக்கும் தொடர்பு ஏற்படுவது புதிது அல்ல. அவர் எங்கு வேலை பார்த்தாலும் அங்கு எந்த பெண்ணுடனாவது தொடர்பு வைத்திருப்பார். எதையாவது மறைக்க வேண்டும் என்றால் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். ஒரு நாள் அப்பாவுடன் தான் வனிதாவின் வீட்டிற்கு சென்று, அங்கு டின்னர் சாப்பிட்டேன். வனிதாவின் இளைய மகளை என் தங்கையாக நினைக்கிறேன்.
என் அப்பாவின் குணத்தை வெறுக்கிறேன். அவர் எப்பொழுது பார்த்தாலும் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதுடன், நிறைய குடிக்கவும் செய்வார். என் அப்பாவுக்கும், வனிதாவுக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டபோது எனக்கும், என் தங்கைக்கும் எதுவும் தோன்றவில்லை. ஏனென்றால் என் அப்பாவுக்கு இது புதிது அல்ல. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது” என்று தெரிவித்துள்ளார் பீட்டர் பாலின் மகன். இந்த பேட்டி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”