Vanitha Vijayakumar: நடிகை வனிதா விஜயகுமார் சில வாரங்களுக்கு முன் சினிமா டெக்னீஷியன் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இதையறிந்த பீட்டரின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல், வனிதாவை திருமணம் செய்துக் கொண்டதாக போலீஸில் புகார் அளித்தார். பின்னர் இந்த விவகாரத்தைப் பற்றி அனைவரும் பேசத் தொடங்கினார். அதில் முக்கியமானவர் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன். அவரின் கருத்துகளுக்கு ஏற்கனவே ட்விட்டரில் பதில் சொல்லியிருந்தார் வனிதா.
இந்நிலையில் வனிதாவையும், லட்சுமியையும் லைவில் வரவழைத்து உரையாட செய்தார்கள் பிகைண்ட்வுட்ஸ் சேனலில். அப்போது ஆக்ரோஷமாக பேசிய வனிதா, லட்சுமியை ஒருமையில் அழைத்தார். இதையெல்லாம் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நீங்கள் என்ன சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியா என லட்சுமியிடம் கேட்டார் வனிதா.
Advertisment
Advertisements
என்னிடம் பேச தைரியம் இல்லையா. கண்ணியம் உள்ள பெண் தானே நீங்கள் என்னிடம் பேசுங்கள். உனக்கு புருஷன் இல்லையா, இரவு 10 மணிக்கு உனக்கு என்ன வேலை. நீ சினிமா இயக்குநராக இருந்தால் படம் இயக்கக்கூடிய வேலையைப் பார். ஒரு கணவர் இருப்பதால் நீ என்ன ஒழுக்கமானவரா? உன்னுடைய விஷயங்களை எல்லாம் வெளியில் சொல்லவா? நான் அப்படி தான் உன்னை பேசுவேன். உனக்கு என்னிடம் அருகதை இல்லை" என்றார்.
வனிதாவுக்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், “இதை விட கேவலமாக பேச எனக்கு தெரியும். ஆனால் நான் பேச விரும்பவில்லை. வருஷத்திற்கு ஒரு புருஷனை மாத்துற நீ பேசுகிறாயா" என்றார். இப்படி இருவரும் மாறி மாறி ஒருமையில் பேசிக் கொண்டனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”