New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/VARALAKSHMI.jpg)
VARALAKSHMI, varu sarath, varalaxmi sarathkumar marriage
ட்விட்டரில் அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு வருவின் துணிச்சலுக்கு இன்னும் வலு சேர்க்கிறது.
VARALAKSHMI, varu sarath, varalaxmi sarathkumar marriage
Varalakshmi Sarathkumar : தைரியமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களைச் செய்ய தயாராக இருக்கும் மிகச் சில நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். தனது தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார். வரு நடித்த 'வெல்வெட் நகரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. தவிர இந்த 2020-ல் வெளியாகும் வருவின் படங்களை ஒரு லிஸ்டே போடலாம்.
பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண கனவை சிதைத்த கொரோனா…
Strong is the new Sexy... Stay safe.. stay strong.!!! pic.twitter.com/0RNlbrnpXH
— ???????????????????????????????????? ???????????????????????????????????????????? (@varusarath) March 19, 2020
எந்த காரணத்துக்காகவும் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யாத வரலட்சுமி, பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்னைகளில் தனது குரலை பதிவு செய்துள்ளார். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை வெளிப்படுத்துவதற்காக 'சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கி, நடத்தி வருகிறார்.
இதெல்லாம் தேவையா! ஹீலர் பாஸ்கர் மீது பாயும் நடவடிக்கை
ட்விட்டரில் அவர் சமீபத்தில் வெளியிட்ட பதிவு வருவின் துணிச்சலுக்கு இன்னும் வலு சேர்க்கிறது. பாதுகாப்பிற்காக தற்காப்புக் கலைகளைக் கற்க மற்ற பெண்களையும் அந்த வீடியோ நிச்சயம் தூண்டும். ஜிம்மில் தான் செய்த தற்காப்பு கலை வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, "வலுவாக இருப்பது தான் புதிய கவர்ச்சி... பாதுகாப்பாக இருங்கள்! வலுவாக இருங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வரும் வரு, அடுத்ததாக படு பயங்கற ஆக்ஷன் படத்தில் நடிப்பது போல் தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.