கொழுக் மொழுக் என்றிருந்த நடிகை வித்யுலேகே ராமன் இடைவிடாத உடற்பயிற்சியால், தற்போது ’சிக்’கென ஸ்லிம்மாகியிருக்கிறார்.
ரோஜா சீரியல்: அன்பா வளத்த பையன இப்படி அடிச்சிட்டாளே
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வித்யுலேகா ராமன். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது லாக்டவுன் அமலில் இருக்கும் வேளையில், இன்னும் அதிக கவனம் செலுத்தி 3 மாதத்தில் 30 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் வித்யுலேகா, " நான் அதிக எடையுடன் இருந்தபோது எல்லோரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி “நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?” என்பது தான். பின்னோக்கிப் பார்த்தால், நானா? எனத் தோன்றுகிறது. ஆனால் இன்று நான் உண்மையில் என்னைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன், ஏனென்றால் நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன், என் வாழ்க்கை முறையையும் பழக்கத்தையும் மாற்றினேன்.
எச் -1 பி மற்றும் இதர விசாக்கள் ரத்து : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
நீங்களும் மனது வைத்தால், எதுவும் சாத்தியம் என்பதை உணர்வீர்கள். ஆனால், ஒழுக்கமாக இருக்க வேண்டும், வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்து சீரான உணவைப் பின்பற்ற வேண்டும். இதற்கு இரகசிய போஷன் அல்லது மாத்திரை எதுவும் இல்லை! வெறும் தூய்மையான கடின உழைப்பு. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல, ஆனால் முடிவைப் பார்க்கும்போது, வியர்வை மற்றும் கண்ணீரின் மதிப்பு தெரிகிறது. இப்போது நான் ( 20/06/20 )- 68.2 கிலோ எடையில் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். வித்யுலேகாவின் இந்த பதிவு பலருக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”