/tamil-ie/media/media_files/uploads/2020/05/Rangaraj-Pandey-Vijay-Sethupathi.jpg)
Rangaraj Pandey, Vijay Sethupathi
அஜித்தின் ’நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தில் அறிமுகமான தொலைக்காட்சி பிரபலம், விஜய் சேதுபதியின் கிராமப்புற திரைப்படமான, க/பெ ரணசிங்கம் படத்தில் நடித்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் பி.விருமாண்டி இயக்குகிறார்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்: விபரம் உள்ளே
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அவர்கள் இருவரும் திருமணமான தம்பதிகளாக நடித்திருப்பதாகவும், தொலைத்த கணவரை ஐஸ்வர்யா ராஜேஷ் தேடி அலைவதைப் பற்றி கதை சுழல்வதாகவும் கூறப்படுகிறது. படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. க/பெ.ரணசிங்கம் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.
படத்தின் பின்னணி இசைப்பணியில் பிஸியாக இருக்கும் ஜிப்ரன், ”அறம் படத்திற்குப் பிறகு, க/பெ.ரணசிங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும். விஜய் சேதுபதியும், ஐஸ்வர்யா ராஜேஷும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ரங்கராஜ் பாண்டே, “ஜிப்ரானிமிருந்து இதைக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்டன்னிங் பெர்ஃபாமென்ஸை நேரில் பார்த்தேன்” என்று தெரிவித்திருந்தார். அதற்கு, ‘உங்களுடைய கதாபாத்திரமும் நிச்சயம் சிறப்பாக இருக்கும்’ என கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் LIVE Updates: ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் என்னென்ன? – மாலை 4 மணிக்கு நேரலை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.