‘என் வாழ்வில் ஒளியேற்றிய புதிய காதலர்’ க்ளூ கொடுத்த சனம் ஷெட்டி

sanam shetty instagram photos : நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள்! காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி

பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

 

சனம் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்தவர். ‘அம்புலி’ (பூங்கவனம்) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ‘சதுரம் 2’ (டாக்டர் ப்ரீத்தி), ஸ்ரீமந்துடு (மேகனா) மற்றும் சிங்கம் 123 (சாந்தினி) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டார்.

‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக, சின்னத்திரையில் நுழைந்தார். திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.

சபீபத்தில நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட போது, ‘சனம் ஷெட்டியை வெளியே அனுப்பியது அநியாயம்’ என்கிற குமுறல்களும் ‘சனம் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்’ என்கிற வசனங்களும் சோஷயல் மீடியாவை ஆக்கிரமித்தது. #NoSanamNoBiggBoss என்கிற ஹாஷ்டேகையும் ட்ரெண்ட் செய்திருந்தனர் நெட்டிசன்கள். முதல் சீசனில் ஓவியாவைத் தொடர்ந்து, மக்களின் அன்பையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார்  சனம் ஷெட்டி.

கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட  தர்ஷன், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் சனம் ஷெட்டி புகாரளித்திருந்தார்.

’திருமணம் செய்ய மறுக்கிறார்’ பிக் பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார்

இந்நிலையில் , சனம் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், “நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள்! காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி!” என்று பதிவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bigg boss contestant sanam shetty instagram photos sanam latest photos

Next Story
சரவணன் – மீனாட்சி ஜோடியையே மாயன் – மகா ஓடர்டேக் செஞ்சிடுவாங்க போல!nini serial nini today episode hotstar mayan maha
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com