Bigg Boss Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 4-ம் தேதி துவங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலனுக்குக் கொடுத்த சர்ப்ரைஸ்! சீரியல் ஜோடியின் வைரல் வீடியோ
???? இது BIGG BOSS! ???? October 4 மாலை 6 மணிக்கு #BiggBossTamil Season 4 இன் #GrandLaunch ???? #VijayTelevision pic.twitter.com/cfTu716f0W
— Vijay Television (@vijaytelevision) September 28, 2020
தொடர்ந்து நான்காவது வருடமாக இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்துக் கொள்பவர்கள் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், கிரண், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஃபெயிலியர் டூ மேட்ச் வின்னர் திவேதியா: வரலாற்று வெற்றி பெற்ற ராஜஸ்தான்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிக் பாஸ் குரலில் ஆடியோ மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது.”இது பிக் பாஸ். எப்படி இருக்கீங்க? இந்த பிக் பாஸ் சீசன் 4-ஓட போட்டியாளர்கள் யார்னு தெரிஞ்சுக்கற நேரம் வந்தாச்சு. வர்ற அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 4-ஓட கிராண்ட் ஓப்பனிங் நடக்கப் போகுது. பாக்க ரெடியா இருங்க. என்ன கமல் சார்?” என பிக் பாஸ் குரல் கேட்க, ’தப்புனா தட்டிக் கேப்பேன், நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்’ என்கிறார் கமல்.
இந்த ஆடியோ ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”