டிடி-யை பார்த்து கண்ணீர் விட்ட இலங்கை ரசிகை - உணர்வுப்பூர்வமான வீடியோ

சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்து தற்போது அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் டிடி.

சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்து தற்போது அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் டிடி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV DD leg fracture, lockdown chennai

Vijay TV DD

Vijay TV DD's Emotional Video : சினிமா பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சின்னத்திரையில் வரும் ஆங்கர்களுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களின் பேச்சு, ஸ்டைல், நடை, உடை பாவனை என பலவற்றையும் கவனித்து வரும் ரசிகர்கள், தனித்துவமான ஸ்டைலைக் கொண்டவர்களு பெரும் ஆதரவளித்து வருகிறார்கள்.

Advertisment

Nivetha Thomas: ’தர்பார்’ வள்ளிய இப்படி விதவிதமான லுக்ல பாத்துருக்கீங்களா?

அந்த வகையில் சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி. பள்ளி சென்றுக் கொண்டிருக்கும் போதே, விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர், அதன் பிறகு ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20, ஜோடி சீசன், மற்றும் காபி வித் டிடி என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதோடு விசில், நள தமயந்தி, ப.பாண்டி, சர்வம் தாள மயம், துருவ நட்சத்திரம் என திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்டாலின், பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்! இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

Advertisment
Advertisements

 

View this post on Instagram

 

PRICELESS EMOTIONS #srilanka2020

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

சென்னை அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்து தற்போது அங்கு பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார் டிடி. சமீபத்தில் அவர் இலங்கை சென்றிருக்கும் போது, அவரது ரசிகை ஒருவர் டிடியை கட்டியணைத்து அழுகிறார். ஐ மிஸ் யூ, ஐ மிஸ் யூ என்று சொன்னவாறு அந்த ரசிகை அழ, டிடி அவர் கண்களை துடைத்து விடுகிறார். இருப்பினும் அந்தப் பெண் அழுகையை நிறுத்தவில்லை. தற்போது அந்த வீடியோவை ‘விலை மதிப்பற்ற உணர்வு’ என தலைப்பிட்டு, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் டிடி. இணையத்தில் அந்த வீடிஒயோ தற்போது வைரலாகி வருகிறது.

Tv Serial Tv Show

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: