Advertisment

ஸ்டாலின், பன்னீர் செல்வத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்! இசட், ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?

முக ஸ்டாலினின் இசட் பிரிவு பாதுகாப்பும், ஓ.பி.எஸ்ஸின் ஒய் பிரிவு பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Center government withdraws CRPF security cover, MK Stalin, OPS

Center government withdraws CRPF security cover

Center government withdraws CRPF security cover : எட்டு துணை ராணுவப்படை வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 2017ம் ஆண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம், பன்னீர் செல்வத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்த கோரிக்கையை வைத்து பாதுகாப்பினை பெற்றுத் தந்தனர்.  தமிழக எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் சுப்பிரமணிய சுவாமி என இருவருக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. சி.ஆர்.பி.எஃப் என்ற மத்திய ரிசர்வ்ட் படையின் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இது இசட் பிரிவு பாதுகாப்பு ஆகும்.

Advertisment

மேலும் படிக்க :  பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 450 சவரன் நகைகள் கொள்ளை

இந்நிலையில் நேற்று (09/01/2020) ஓ.பி.எஸ் மற்றும் முக ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட் பாதுகாப்புப்படை திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு. மத்திய துணை ராணுவத்தினருக்கு பதிலாக தமிழக காவல்துறையினரே இவ்விருவருக்கும் பாதுகாப்புகளை வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்களுக்கான சிறப்பு பாதுகாப்புகள் திரும்பப்பெறப்படுகிறது.

தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டம் குறித்த வீடியோ

மாநில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கமாண்டோ பாதுகாப்பினை வழங்கவும், திரும்பப் பெற்றுக் கொள்ளவும் மத்திய அரசுக்கு உரிமைகள் உண்டு.  திரும்பப் பெறும் போது மாநில அரசின் ஒப்புதலோடு தான் இந்த கமாண்டோ பாதுகாப்பினை திரும்பப் பெற்றுக் கொள்ள இயலும். இந்நிலையில் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புப் படை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது பெரும் சர்ச்சையை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வழங்கப்படும் பாதுகாப்பு

இந்தியாவில் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் அமைச்சர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படை (SPG (Special Protection Group)), தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG (National Security Guards)), இந்திய-திபெத் எல்லை காவல்துறையினர் (ITBP (Indo-Tibetan Border Police)) மற்றும் மத்திய ரிசர்வ் காவல் துறை (CRPF) போன்ற படையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பினை வழங்குவார்கள்.

Z - பிரிவு பாதுகாப்பில் மொத்தம் 22 பாதுகாப்பு படையினர் தலைவர்களுக்கு பாதுகாப்புகளை வழங்கி வருவார்கள். அதில் 4 அல்லது 5 தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஹெல்க்கர் மற்றும் கோச் எம்.பி.எஸ் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பினை தருவார்கள். இவர்கள் இல்லாமல் மத்திய ரிசர்வ் காவல்துறையினர் மற்றும் டெல்லி போலீஸார் இந்த வகை காவலுக்கு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

Y பிரிவு பாதுகாப்பு படை என்பது 11 பேர் கொண்ட பாதுகாப்புப் படையின் சேவையாகும். இதில் ஒன்று அல்லது 2 மத்திய காவல்த்துறை கமாண்டோக்கள் மற்றும் இதர காவல்துறையினர் பணியில் அமர்த்தபப்டுவார்கள். இவர்கள் இல்லாமல் 2 பெர்சனல் செக்யூரிட்டி கார்ட்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள்.  பிரதமருக்கு மட்டும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படும். இவை இல்லாமல் இசட் +, மற்றும் எக்ஸ் கேட்டகிரி பாதுகாப்புகள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க : இதை மட்டும் செய்யத் தயாரா? முதல்வருக்கு பாராட்டு விழாவே நடத்துகின்றோம் – முக ஸ்டாலின்

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment