/tamil-ie/media/media_files/uploads/2020/03/Naam-Iruvar-Namakku-Iruvar-Vijay-TV-Mayan-Devi.jpg)
Naam Iruvar Namakku Iruvar, Vijay TV, Mayan Devi
Vijay TV Serial : மாயன் தேவியை பெட்டி பாம்பா அடக்கி வச்சு இருந்தான். அப்படி இருக்கும்போது இப்போ எப்படி தேவி பழைய ஃபார்முக்கு வந்தா? ஒண்ணுமே புரியலியே, மாயன் முகத்தில் குழப்ப ரேகைகள். ஹோட்டலுக்கு போனோம், இல்லை இல்லை அதுக்கு முன்னால பீச்சுக்கு போயி ஜாலியா நனைஞ்சோம். டிரஸ் நனைஞ்சு போச்சுன்னு ஹோட்டலில் தங்கினோம். அங்கே பல்லியை பார்த்து பயந்த தேவி மாயனை உடும்பு புடியா புடிச்சுகிட்டா. கல்யாணம் ஆகி பல ராத்திரிக்கு நடுவில இந்த மொத ராத்திரி சூப்பரா முடிஞ்சுது.
’நாயகி’ சீரியல் ஆனந்தி : ஆச்சர்யப்பட வைக்கும் மறுபக்கம்!
காலையில வீட்டுக்கு போலாம்னு சொல்லி கிளம்பி வந்தாச்சு. வீட்டில் வந்தும் வெட்கப்பட்டுக்கிட்டே இருக்க தேவி, மாயனை வாங்க போங்கன்னு வாய் நிறைய கூப்பிடறா. சும்மாச்சுக்கும் ஏங்க குடிக்க கொஞ்சம் தண்ணின்னு மாயன் கேட்டா, உடனே சின்னப் பொண்ணு மாதிரி ஓடிப்போய் தண்ணி கொண்டு வந்து குடிக்கற வரைக்கும் பார்த்துகிட்டே நிக்கறா. இந்த கோலத்துல தேவியை பார்க்க வீட்டில் யாருக்கும் குடுத்து வைக்கலியேன்னு மாயன் சலிச்சுக்கறான்.
வீட்டில் பெரிசுங்க ரெண்டு இருக்கும் அதுங்களும் இந்த நேரத்துல இல்லாம எங்கே போயிருச்சுங்கன்னு சொல்லிகிட்டே, இந்த விஷயத்தை யார்கிட்டேயாவது சொல்லணுமேன்னு தனது மொபைலை எடுத்தான். அப்போதுதான் தேவிக்கு தன் மொபைல் நினைவு வந்துருச்சு. என் போனை குடுங்கன்னு மாயனிடம் கெஞ்சி கேட்கிறாள். அது கிடக்கட்டும்.. அப்புறமா எடுத்து தரேன்னு மாயன் சொல்ல, நேத்து போனை வாங்கி வச்சீங்க. குடுங்க என்று மறுபடியும் கேட்கிறாள் தேவி. மாயன் போனை எடுத்துக் கொடுக்க, அதுவரைக்கும் மாயன் ஆட்டுவிக்கற பாம்பா இருந்த தேவியின் முகம் மாறிப்போச்சு.
கொரோனா வைரஸ்: ‘ஹெர்ட் இம்மியூனிட்டி’ என்றால் என்ன?
சொன்னோம்ல.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாதுனு! ????
நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI#MaayanDevi#VijayTelevisionpic.twitter.com/PLMnB75hC2
— Vijay Television (@vijaytelevision) March 18, 2020
வரிசையா மெசேஜ் குவியுது. தேவி முகம் அப்படியே மாறிப்போச்சு. அந்த நேரத்தில் இவன் தேவி.. குட்டிமா..தேவி பேபி.. இப்படி எல்லாம் கொஞ்சி சாப்பிட போலாமான்னு கேட்க, உனக்கு பசிச்சுதுன்னா நீ போயி எடுத்துக் கொட்டிக்கேண்டா, என்னை ஏன் டார்ச்சர் பன்றேன்னு எரிஞ்சு விழுந்துட்டா. அப்படி இருந்த தேவி இப்படி ஆனதை ஷாக்காகி பார்க்கிறான் மாயன்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.