Vijay TV Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், லாக்டவுன் காரணமாக மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மறு ஒளிபரப்பில் இந்த சீரியல் போரடிக்கலேன்னு ரசிகர்கள் சொல்கிறார்கள். இப்படி ரசிகர்கள் சொல்றது அரிது தான். "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை" என்று பாடும் அளவுக்கு குதூகலமான குடும்பத்தை காண்பித்தால், ரசிகர்கள் விரும்பிப் பார்க்காமல் என்ன செய்வார்கள். அந்த நாடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தான் எபிசோடுகளை கொடுத்து வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு.
’இசையில் மட்டுமல்ல பாசத்திலும் அவர் ஞானி தான்’ : ரசிகருக்கு வீடியோ கால் செய்த இளையராஜா!
அதனால தான், லாக்டவுன் காலத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை உட்கார்ந்து பார்க்கிறார்கள். ஜீவாவும், மீனாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். முல்லையும், கதிரும் பெரியவர்கள் சம்மதத்துக்கு கட்டுப்பட்டு திருமணம் செய்துக் கொண்டவர்கள். இதில் யார் ரொமான்ஸ் அதிகம் செய்வார்கள் என்று பார்த்தால் கதைப்படி ஜீவாவும், மீனாவும் தான் அதிகம் ரொமான்ஸ் செய்ய வேண்டும். ஆனால், இங்கே நேரெதிர். கதிரும், முல்லையும் ரொமான்ஸ் பண்றாங்க. குடும்பமே அவங்களுக்கு சாதகமா நடந்துக்குது. மீனா ஜீவாவை ரொம்ப காதலிக்கிறாள். ஜீவாவும் அப்படித்தான். ஆனா என்னமோ இந்த ரொமான்ஸ் பண்றது மட்டும் பய புள்ளைக்கு வரவே இல்லை.
கொரோனா ஹாட்ஸ்பாட்டா கோயம்பேடு சந்தை? : கொரோனா பரவலை தடுக்க தீர்வு இதோ.
நடு ஹாலில் பாக்கெட் போடும் வேலையில் குடும்பமே ஈடுபட்டு இருக்க. முல்லையும், கதிரும் அப்படி ஒரு பார்வை பார்த்துக்கறாங்க. இவங்க ரொமான்ஸுக்கு ஜீவாவும் தன் பங்குக்கு உதவி செய்யறான். புருஷன் அவங்க ரொமான்ஸுக்கு ஹெல்ப் பண்றதை பார்த்த மீனாவுக்கு வயிறு பத்திகிட்டு எரியுது. ஜீவா கிட்டே வான்னு கூப்பிடறா..ம்ஹூம்.. நீ அடிப்பேன்னு ஜீவா சொல்றான். அதெப்படி ஜீவா எல்லார் ரொமான்ஸுக்கும் ஹெல்ப் பண்றே. ரூமுக்குள்ள வந்தா மட்டும் கணக்கு நோட்டை பார்க்கறேன்னு காதைத் திருகறா. பின்னே வயித்தெரிச்சல் இருக்காதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”