VJ Priyanka Deshpande : விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களுக்கும் பிரபலமானது. அத்தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதில் முதன்மையானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.
பிரியங்கா
மே 3-க்கு முன்பு பயணிகள் ரயில் இயங்குமா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலக்கபோவது பெற்று வருகிறார். இவரது சிரிப்பு படு பிரபலம். இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். விஜய் டிவி-க்கு வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார்.
சூப்பர் சிங்கர்ஸ் ஜூனியர்ஸ், தி வால் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா
கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். சின்ன வயதிலிருந்தே டிவி துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார். ஜீ டிவியில் ஒளிபரப்பான “த சிற்பி கேர்ள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரியங்கா தனது கரியரைத் தொடங்கினார். சன் டிவி, சன் மியூசிக், ஆகிய சேனல்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பணிபுரிகிறார். "சூப்பர் சிங்கர் 5" ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
கணவருடன் பிரியங்கா
6 வயது மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்கும் தந்தை
7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்த பிரியங்கா, அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் ஏர் ஹோஸ்டர் ஆகியிருப்பாராம். ரஜினியும், அனுஷ்கவும் பிரியங்காவின் ஃபேவரிட் திரை நட்சத்திரங்களாம். பயணமும், தென்னிந்திய உணவுகளும் பிரியங்காவிற்கு பிடித்தமானவைகளாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”